திருப்பூர்: கால்நடைகளுக்கு தேவையான தீவனத்தை தமிழக அரசே வழங்க முடிவு செய்துள்ளது.
கடும் வறட்சி காரணமாக தீவன பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. வெளிமார்க்கெட்டில் அதிக விலைக்கு தீவனங்களை வியாபாரிகள் விற்கின்றனர். அதிக விலைக்கு தீவனங்களை வாங்க முடியாத பலர் வேறு தொழிலுக்கு மாறுகின்றனர். மாடு எண்ணிக்கை குறைவதால், பால் கொள்முதல் குறைகிறது; விலையும் அதிகரிக்கிறது. அத்தியாவசிய பொருளில் முக்கியமானது பால் என்பதால், அதன் விலையை கட்டுப்படுத்த, மாடுகளுக்கான தீவனத்தை அரசே குறைந்த விலையில் வழங்க முடிவு செய்துள்ளது. இதற்காக, தமிழகம் முழுவதும் தீவன கிடங்கு அமைக்க...