நாட்டுகோழி விற்பனைக்கு

திறந்த வெளியில் வளர்க்கப்பட்ட நாட்டுகோழி,நாட்டுகோழிமுட்டை,நாட்டுகோழி குஞ்சு விற்பனைக்கு

Country Chicken For Sales

Country Chicken,Hen, Egg, Goat, and Chicken For sales.

நாட்டுக்கோழி வளர்ப்பு

நாட்டுக்கோழி, ஆடு வளர்ப்பு, பசுந்தீவன உற்பத்தி, அசோலா, கோ-4, கரையான் உற்பத்தி மற்றும் இயற்கை வேளாண்மை

இயற்கை வேளாண்மை

அசோலா உற்பத்தி, மண்புழு உரம், பஞ்சகாவிய, ஜீவமிர்தம், அமிர்தக்கரைசல் மற்றும் வேளாண்மை குறித்த தகவல்கள்

ORGANIC FARMING;

Vermi compost, Azolla , Organic farming

Tuesday, 14 April 2020

நாட்டுக்கோழி கூண்டு

நாட்டுக்கோழி கூண்டு

ஸ்ரீ காவியா நாட்டுக்கோழிப்பண்ணை
நாட்டுக்கோழி கூண்டு

Monday, 13 April 2020

இலுப்பை மரம்

இலுப்பை மரம் - அழிவின் விளிம்பில் 

இலுப்பை மரம் மேகக்கூட்டங்களை தருவித்து மழையை வரவழைக்கும் குணம்கொண்டது.

இலுப்பையின் தாயகம் தமிழகம் தவிர நேப்பாளம், இலங்கை மற்றும் மியான்மரிலும் காணப்படுகிறது. நம் நாட்டில், ஜார்கண்ட், குஜராத், மத்தியபிரதேசம், பீகார், ஒரிஸ்ஸா, கேரளா மற்றும் தமிழ்நாட்டிலும் உள்ளது. இது சப்போட்டா மரத்தின் வகையை சேர்ந்தது.

தமிழகத்தில் 1950 ஆம் ஆண்டு வாக்கில் 30,000 மரங்களுக்கும் அதிகமாக இருந்தன. ஆனால் 2015 ஆம் ஆண்டு கணக்கின்படி 10,000 மரங்களுக்கும் குறைவாக உள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.

இலுப்பை ஒரு வெப்ப மண்டல தாவரம். வறண்ட நிலங்களிலும் எளிதாக வளரக்கூடியாது. இலுப்பையின் ஆயுட்காலம் நானூறு ஆண்டுகளுக்கு மேல்.
சுமார் அறுபது அடிக்கும் மேல் வளரக்கூடியது.

இலுப்பை மரம் அதிகமான மருத்துவ குணமுடைய தாவரம். இதன் இலை, பூ, விதை , பட்டை, எண்ணெய், புண்ணாக்கு  ஆகிய அனைத்தும் சங்க காலம் தொட்டு இன்று வரையிலும் மருத்துவத்திற்கான பயன்பாட்டில் உள்ளது.

இதன் பருவகாலம் ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை. முளைத்த நாளிலிருந்து பத்து வருடங்களுக்கு பின்னர்தான் பலன் தரும்.

"ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப் பூ சக்கரை" என்பது பழமொழி.

ஒரு வருடத்திற்கு இருநூறு கிலோவிலிருந்து முன்னூறு கிலோ பூவும், இருபது முதல் இருநூறு கிலோ வரை இலுப்பை விதையும் கிடைக்கும். ஒரு கிலோ விதையிலிருந்து முன்னூறு மில்லி லிட்டர் எண்ணெய் எடுக்கலாம்.

ஒரு டன் பூவிலிருந்து எழுநூறு கிலோ சர்க்கரையும் நானூறு கிலோ ஆல்ககாலும் தயாரிக்கலாம். இலுப்பை ஆல்ககால் (சாராயம்) ஒரு மாற்று  எரிபொருளாக பயன்படக்கூடியது. இலுப்பை எண்ணெய் ஒரு வலி நிவாரணி, சமையலுக்கும் இது பயன்படுகிறது.

இது தவிர பாம்பு விஷம், வாத நோய், சக்கரை வியாதி, சளி , இருமல்  மூலநோய், வயிற்றுப்புண், சுவாசக்கோளாறு , காயம்  ஆகியவற்றிற்கு மருந்தாக பயன்படுகிறது. இலுப்பைப் பூ ஊறுகாய் காச நோய்க்கு அருமருந்தாகும்.

விறகாக மட்டுமின்றி அறைக்கலன்கள், மரச்சாமான்கள், சமையல் பாத்திரங்கள், வண்டிச்சக்கரங்கள், மரப்பெட்டிகள் போன்றவற்றின் தயாரிப்பிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

உப்புநீரை தாங்குவதால் இம்மரம் படகுகள் செய்யவும் பயன்படுத்தப்படுகிறது.

வணிகரீதியாக ஒரு ஏக்கருக்கு சுமார் இருநூறு  இலுப்பை மரங்கள் வரை நட்டு, ஆண்டொன்றுக்கு ஆயிரத்தி ஐநூறு லிட்டர் எண்ணெய் எடுத்தால் அதன் மூலமாக மூன்று லட்சம் ரூபாய் வரை சம்பாதிக்கலாம். இது தவிர பூ , பட்டை, சர்க்கரை , புண்ணாக்கு , சாராயம், சிகைக்காய் ஆகிய அனைத்துமே பணம்தான்.

ஒரு கண அடி மரம் ஆயிரம் ரூபாய் வரை விலை கொண்டது . அறுபது ஆண்டுகள் கழித்து ஒரு மரம் சுமார் ஐந்து லட்சத்திற்கு மேல் மதிப்புடையதாகிறது.

இதை ஒரு பணம் காய்க்கும் மரம் என்று கூறினால் அது மிகையாகாது.

வவ்வாலுக்கு மிகவும் பிடித்தமான உணவு இலுப்பை பழங்கள்தான்.

இலுப்பையின் அழிவு வவ்வாலின் அழிவு.

வவ்வாலின் அழிவு கொசுவின் வளர்ச்சி.

கொசுக்களின் வளர்ச்சி வியாதிகளின் வளர்ச்சி.

இலுப்பையை அழிவிலிருந்து மீட்போம்,

சுற்றுச்சூழல் மற்றும் ஆரோக்கியம் காப்போம்.....

ஒவுருவரும் அவர் அவர் பங்குக்கு தன் காடுகளில் ஒரு மரமாது வளர்க்க பாருங்கள்..


நன்றி... முகநூல் பதிவிலிருந்து

Friday, 21 March 2014

கேஎஃப்சி சிக்கனை எப்படி செய்வது??

கேஎஃப்சி (KFC) சிக்கனை தேடி கடைக்கு செல்ல வேண்டாம்பாதுகாப்பான முறையில் வீட்டிலேயே தயார் செய்யலாம் !!


பலருக்கு கேஎஃப்சி சிக்கனை எப்படி செய்கிறார்கள் என்ற கேள்விமனதில் எழும். அத்தகையவர்களுக்காக அந்த கேஎஃப்சி சிக்கனை எப்படி வீட்டிலேயே செய்வதென்று பார்ப்போம். இதன் செய்முறையைப் பார்த்தால், இவ்வளவு தானா என்று பலர் ஆச்சரியப்படுவோம். ஏனெனில் அந்த அளவில் இந்த ரெசிபியின் செய்முறையானது எளிமையாக இருக்கும்.

சரி, அந்த கேஎஃப்சி சிக்கன் ரெசிபியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!
broasted-chicken

தேவையான பொருட்கள்:

சிக்கன் – 1 கிலோ (லெக் பீஸ் அல்லது மார்பக பீஸ்)
இஞ்சி பேஸ்ட் – 1 டேபிள் ஸ்பூன்
பூண்டு பேஸ்ட் – 1 டேபிள் ஸ்பூன்
சோயா சாஸ் – 1 டேபிள் ஸ்பூன்
சில்லி சாஸ் – 1 டேபிள் ஸ்பூன்
தக்காளி சாஸ் – 1 டேபிள் ஸ்பூன்
மிளகு தூள் – 1 டீஸ்பூன்
உப்பு – 1 1/2 டீஸ்பூன்
தண்ணீர் – 1 கப்
மாவிற்கு…
மைதா – 1 1/2 கப்
முட்டை – 1 (நன்கு அடித்துக் கொள்ளவும்)
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
தண்ணீர் – 2 கப்
உப்பு – தேவையான அளவு
கோட்டிங்கிற்கு…
பிரட் தூள் – தேவையான அளவு
எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை:
முதலில் சிக்கன் துண்டுகளை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும். பின்னர் அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் தக்காளி சாஸ், சோயா சாஸ், சில்லி சாஸ், இஞ்சி மற்றும் பூண்டு பேஸ்ட், மிளகு தூள், உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து 10 நிமிடம் அடுப்பில் வைத்து, சிக்கன் முக்கால்வாசி வெந்ததும், அதனை இறக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு மற்றொரு பாத்திரத்தில் மைதா, உப்பு, மிளகு தூள், மஞ்சள் தூள், அடித்து வைத்துள்ள முட்டை மற்றும் தண்ணீர் ஊற்றி சற்று நீர்மமாக கலந்து கொள்ள வேண்டும். பிறகு ஒரு தட்டில் பிரட் தூளை போட்டு வைத்துக் கொள்ள வேண்டும். பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சிக்கன் துண்டை எடுத்து, மாவில் நனைத்து, பிரட் தூளில் பிரட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.
இதுப்போன்று அனைத்து சிக்கன் துண்டுகளையும் செய்தால், சுவையான கேஎஃப்சி சிக்கன் ரெடி


நன்றி
பரமக்குடி சுமதி

Monday, 20 January 2014

கால்நடைகளுக்கு தேவையான தீவனத்தை தமிழக அரசே வழங்க முடிவு செய்துள்ளது.

திருப்பூர்: கால்நடைகளுக்கு தேவையான தீவனத்தை தமிழக அரசே வழங்க முடிவு செய்துள்ளது.

கடும் வறட்சி காரணமாக தீவன பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. வெளிமார்க்கெட்டில் அதிக விலைக்கு தீவனங்களை வியாபாரிகள் விற்கின்றனர். அதிக விலைக்கு தீவனங்களை வாங்க முடியாத பலர் வேறு தொழிலுக்கு மாறுகின்றனர். மாடு எண்ணிக்கை குறைவதால், பால் கொள்முதல் குறைகிறது; விலையும் அதிகரிக்கிறது. அத்தியாவசிய பொருளில் முக்கியமானது பால் என்பதால், அதன் விலையை கட்டுப்படுத்த, மாடுகளுக்கான தீவனத்தை அரசே குறைந்த விலையில் வழங்க முடிவு செய்துள்ளது. இதற்காக, தமிழகம் முழுவதும் தீவன கிடங்கு அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

கால்நடைத்துறை இணை இயக்குனர் ஒருவர் கூறியதாவது: மாடுகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப, ஒவ்வொரு மாவட்டத்திலும் நான்கு தீவன கிடங்குகள் அமைக்கப்படும். மாடு வளர்ப்பாளர், விவசாயி, தங்களது ரேஷன் கார்டை கொண்டு வந்து, எத்தனை மாடு என்பதை பதிவு செய்து கொள்ள வேண்டும். பதிவு செய்தபின், ஒவ்வொரு மாட்டுக்கும் தனி கார்டு வழங்கப்படும். மாடுகளுக்கு தேவையான தீவனத்தை, கார்டை காண்பித்து, தீவன கிடங்கில் பெறலாம். வெளிமார்க்கெட்டில் வைக்கோல் ஒரு கிலோ, எட்டு ரூபாய்க்கு விற்கப்படுகிறது. மொத்தமாக கொள்முதல் செய்து கிலோ இரண்டு ரூபாய்க்கு அரசு விற்க உள்ளது. மாடு ஒன்றுக்கு மூன்று கிலோ வைக்கோல் வழங்கப்படும். எத்தனை மாடு வைத்திருந்தாலும் அதிகபட்சமாக ஒரு நாளைக்கு 21 கிலோ மட்டுமே கொடுக்கப்படும்,' என்றார்.

128 தீவன மையங்கள்:


32 மாவட்டங்களில் தலா நான்கு தீவன கிடங்குகள் விதம் மொத்தம் 128 தீவன கிடங்குகள் அமைக்கப்பட உள்ளன. சேலம் மாவட்டத்தில் தலைவாசல், கொங்கணாபுரம், மேச்சேரி, நங்கனவள்ளி; கோவையில் கிணத்துக்கடவு, மதுக்கரை, சூலூர், சுல்தான்பேட்டை; திருப்பூரில் செங்கப்பள்ளி, காங்கயம், மூலனூர், வாளவாடி பகுதியில் தீவன கிடங்குகள் அமைகின்றன.

கலெக்டரே பொறுப்பு:


அந்தந்த மாவட்ட கலெக்டரின் நேரடி கட்டுப்பாட்டில் தீவன கிடங்கு கொண்டு வரப்படுகிறது. கலெக்டர், கால்நடைத்துறை இணை இயக்குனர், துணை இயக்குனர் ஆகிய மூவர், வேளாண் இணை இயக்குனர், தோட்டக்கலை அதிகாரி ஒருவர் உள்ளிட்டோர் இணைந்த குழு ஏற்படுத்தப்படும். வைக்கோல் கொள்முதல் செய்வது, உண்மையான பயனாளிகளுக்கு வழங்குவது உள்ளிட்ட பணி, அக்குழுவின் மேற்பார்வையில் நடக்கும். இம்மாத இறுதியில், ஒவ்வொரு மாவட்டத்திலும் இக்குழு தனது செயல்பாட்டை துவக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நாட்டுக்கோழி முட்டை - விற்பனைக்கு

இயற்கையான மேய்ச்சல் முறையில் தோப்பில் வளர்க்கப்பட்ட அசல் நாட்டுக்கோழிகள் முட்டைகள் விற்பனைக்கு. இங்கு நாட்டுக் கோழிகள் எந்தவித இரசாயன மருந்துகளும் கொடுக்கப்படாமல் இயற்கையான முறையில் வளரர்க்கபடுகிது.
நாட்டுக்கோழி முட்டை- ஸ்ரீ காவியா நாட்டுகோழி பண்ணை
தொடர்புக்கு: 9965511033                     8883310296

பல்லடம் மற்றும் அருகில்...

Saturday, 9 November 2013

அக்னி அஸ்திரம் எப்படி தயாரிப்பது?

வேளாண் வித்தகர் சுபாஷ் பாலேகர் ஐயா வழிகாட்டுதல்


~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

தயாரிக்க தேவையான பொருட்கள் :
###############################
புகையிலை அரை கிலோ,
பச்சை மிளகாய் அரை கிலோ,
வேம்பு இலை 5 கிலோ நாட்டு பசுமாட்டு சிறுநீர் (கோமியம்) 15 லிட்டர் மற்றும் மண்பானை.

தயாரிக்கும் முறை:
################
நாட்டு பசுமாட்டு சிறுநீர் (கோமியம்)15 லிட்டர், புகையிலை அரை கிலோ, பச்சை மிளகாய் அரை கிலோ, வேம்பு இலை 5 கிலோ இவற்றை மண்பானையில் (வேறு பாத்திரங்கள் பயன்படுத்தக்கூடாது ) போட்டு நன்றாக கொதிக்க வைக்கவேண்டும் நான்கு முறை மிண்டும் மிண்டும் கொதிக்க வைக்கவேண்டும். இறக்கியபிறகு, பானையின் வாயில் துணியைக் கொண்டு கட்டி 48மணி நேரம் அப்படியே வைத்துவிடவேண்டும் நீரின் மேல் ஒரு ஏடு போல் ஆடை படியும். அதை நீக்கி விட்டால் உள்ளே இருக்கும் தெளிந்த நீர்தான் அக்னி அஸ்திரம். இக்கரைசலை 3 மாதம் வரை பாட்டிலில் சேமித்து வைக்கலாம்.

அக்னி அஸ்திரம் எப்படி பயன்படுத்துவது?
#################################
100 லிட்டர் நீரில்,.3 லிட்டர் அக்னி அஸ்திரம், 3லிட்டர் கோமியம் கலந்து பயிர்கள் மேல் தெளித்தால் போதும் புழு, புச்சிகள் காணாமல் போய்விடும்.

அக்னி அஸ்திர நன்மைகள் என்ன?
############################
1. பயிர்களில் காய்ப்புழு, தண்டு துளைப்பான் போன்ற புழுக்களைக் கட்டுப்படுத்த அக்னி அஸ்திரம் தெளிக்கலாம்.
2. எல்லா வகை பயிர்களுக்கும் பயன்படுத்தலாம். எந்த கட்டுப்பாடும் இல்லை.

Monday, 7 October 2013

புறக்கடையில் நாட்டுக்கோழி வளர்ப்பு


புறக்கடையில் நாட்டுக்கோழி வளர்ப்பு


பரண்மேல் வெள்ளாடு வளர்ப்பு -- காணொளி

பரண்மேல் வெள்ளாடு வளர்ப்பு

எலி ஒழிப்பில் இயற்கை உத்திகள்

எலி ஒழிப்பில் இயற்கை உத்திகள்

எலிகளின் வாழ்க்கை முறை: நன்செய் மற்றும் புன்செய் நிலங்களில் காணப்படும்
சிறிய பெருச்சாளிகள் முதுகுப்பகுதி கரும்பழுப்பு நிறத்துடன் சிறிய வாலுடனும்
காணப்படும். இவைகளில் கருத்தரிக்கும் காலம் 4 நாட்கள் ஆகும். கருத்தரித்த 22
நாட்களில் 1 முதல் 11 குட்டிகளை ஈணும். எலிக்குட்டியானது பிறந்த 3 மாதத்திற்கு
உள்ளாகவே கருத்தரிக்க தயாராகி விடுகிறது. கதிர் முற்றும் மற்றும் அறுவடைக்
காலமான அக்டோபர், நவம்பர் மாதங்களில்தான் அதிகமான அளவில் இனச்சேர்க்கை செய்து
குட்டிகளை ஈணுகிறது. சராசரியாக ஒரு ஆண்டிற்கு 100 குட்டிகள் வரை இனப்பெருக்கம்
இருக்கும்.

*எலி ஒழிப்பு உத்திகள்*

வயல் வெளியில்: ணு பயிர் அறுவடை முடிந்தவுடன் எலி வளைகளை வெட்டி எலிகளை
அழிக்கலாம்.
* ஆழமாக உழுவதன் மூலம் எலிவளைகளை அழித்து எலிகளை ஒழிக்கலாம்.
* வயல்களில் குறுகிய வரப்புகளை அமைத்து எலிகள் வளைகளை அமைப்பதை தவிர்க்கலாம்.
* வயல்களுக்கு அருகிலுள்ள புதர்களை அழித்து எலிகள் தங்குவதை தவிர்க்கலாம்.
* வைக்கோல் படப்புகளையும் பருத்தி மார் போன்றவைகளையும் வயல்களுக்கு அருகில்
வைக்கக்கூடாது.
* ஆந்தைகள் எலிகளை பிடித்து இரையாக உண்ணும். எனவே, அவைகள் வயல்களில் அமர்ந்து
எலிகளை பிடித்து உண்பதற்கு ஏதுவாக "டி' வடிவ குச்சிகளை நட்டு வைக்க வேண்டும்.
* தண்ணீர் அதிகம் பாய்ச்சி வளைக்குள் இருக்கும் எலிகளை மூச்சுத்திணறச் செய்து
விரட்டியடிக்கலாம்.
* இரவு வேளைகளில் விளக்குகளை பயன்படுத்தி விளக்கின் வெளிச்சத்தினால் ஓடாமல்
நிற்கும் எலிகளை அடித்துக் கொல்லலாம்.
* எலிகளை பாம்புகள் பிடித்துத் திண்பதால் பாம்புகளை அழிப்பதை தவிர்க்கலாம்.
* கிட்டிகள் வைத்து எலிகளை பிடித்து அழிக்கலாம்.
* வாய் அகன்ற பானைகளில் சாணம் கலந்த நீரை நிரப்பி மேற்பரப்பில் சோறு
போட்டுவைத்தால் அவற்றை உண்ணவரும் எலிகள் அந்த சாண நீரில் வீழ்ந்து மூழ்கி
இறந்துவிடும்.
தொடர்பு: ச.கண்ணையா, வேளாண்மை அலுவலர், பரமக்குடி. 04564-226 915.

நன்றி: தினமலர்

Thursday, 18 July 2013

ஆடுகளுக்கான மூலிகை வைத்தியம்

http://sreekaviyafarms.blogspot.in/
ஆடுகளுக்கான மூலிகை வைத்தியம்


கழிசலுக்கு கத்திரி... சளிக்கு கண்டங்கத்திரி!

ஆடுகளுக்கான மூலிகை வைத்தியம் சித்த மருத்துவர்: ராஜமாணிக்கம்,

 ''ஆடுகளுக்குச் சரியான நேரத்துல குடல்புழு நீக்கலனா, மெலிஞ்சு போயிடும். கால்படி அளவு சூபாபுல் (சவண்டல்) விதையை, 24 மணி நேரம் தண்ணியில ஊற வெச்சு, அதுல இருந்து 50 மில்லி தண்ணிய எடுத்து ஆட்டுக்குக் கொடுத்தா போதும். குடல்புழு வெளிய வந்துடும்.

வேப்பிலை, மஞ்சள், துளசி இது மூணையும் சம அளவு எடுத்து அரைச்சி, நெல்லிக்காய் அளவு கொடுத்தா... வாய்ப்புண் ஆறிடும்.

காய்ச்சல் வந்த ஆடுகளுக்கு, 3 சின்ன வெங்காயம், 5 மிளகு, ஒரு வெற்றிலையை ஒண்ணா வெச்சு கொடுத்தா... சரியாகிடும்.

50 மில்லி நெய்யை மூணு நாளைக்குக் கொடுத்துட்டு வந்தா... தொண்டை அடைப்பான் சரியாகிடும்.

கொழிஞ்சியை அரைச்சி ஒரு கொய்யாப்பழ அளவுக்குக் கொடுத்தா... விஷக்கடி சரியாகிடும்.
ஆடுகளுக்கு வர்ற பெரிய பிரச்னை கழிச்சல். இதுக்கு ரொம்ப கஷ்டப்பட வேணாம். 5 கத்திரிக்காயைச் சுட்டு தின்னக் கொடுத்தா போதும். கழிசல் காணாம போயிடும்.

கண்டங்கத்திரிப் பழத்தை ஒரு கைப்பிடி அளவு எடுத்து, வெள்ளாட்டுக் கோமியத்துல 24 மணி நேரம் ஊறவெச்சு, சாறு எடுத்து, மூணு சொட்டு மூக்குல விட்டா மூக்கடைப்பு, சளி எல்லாம் சரியாகிடும்.

சீதாப்பழ மர இலையை ஆடுக மேல தேய்ச்சி விட்டா பேன் எல்லாம் ஓடிடும்.

ஜீரண கோளாறு வந்தா, 300 மில்லி தேங்காய் எண்ணெய் கொடுத்தா சரியாகிடும். நல்லெண்ணெயும், மஞ்சளும் கலந்து தடவுனா கழலை போயிடும்'' என்று வரிசையாக பட்டியலிட்டுவிட்டு,

''ஆடுகளுக்குத் தேவையான கை வைத்தியத்தைத் தெரிஞ்சு வெச்சுகிட்டா... அவசரத்துக்கு டாக்டரைத் தேடி அலையாம, நீங்களே ஆடுகள காப்பாத்திடலாம்'' என்று நம்பிக்கையூட்டினார்.



நன்றி: சித்த மருத்துவர்: ராஜமாணிக்கம்,  9943265061

Thursday, 20 June 2013

நாட்டுக் கோழிகளுக்கு கரையான் தீவனம்


      கரையானின் தீமைகள் குறித்தே அறிந்த பலருக்கு கரையான் தீவனமாகப் பயன்படும் என்றால் ஆச்சரியமாகத்தானே இருக்கும். நாட்டுக் கோழி வளர்ப்பவர்களுக்கு கரையான் சிறந்த உணவாக பயன்படுகிறது. கரையான் உற்பத்தி செய்து கோழிக் குஞ்சுகளுக்குத் தீனியாகக் கொடுத்தால், கரையான் சாப்பிட்ட குஞ்சுகள் மற்ற குஞ்சுகளைவிட இருமடங்காக வளர்ச்சியடையும்.

 
http://sreekaviyafarms.blogspot.in
கரையான்

தேவையான பொருட்கள்

      1. ஒரு பழைய பானை

      2. கிழிந்த கோணி/சாக்கு

      3. காய்ந்த சாணம்

      4. கந்தல் துணி, இற்றுப்போன கட்டை, மட்டை, காய்ந்த இலை, ஓலை போன்ற நார்ப்பொருட்கள்



கரையான் உற்பத்தி செய்முறை

      மேற்கண்டவற்றை பழைய பானையினுள் திணித்து சிறிது நீர் தெளித்து வீட்டிற்கு வெளியே தரையில் கவிழ்த்து வைத்துவிட வேண்டும். முதல் நாள் மாலை கவிழ்த்து வைத்தால் மறுநாள் காலை திறந்து பார்த்தால் தேவையான கரையான் சேர்ந்திருக்கும். தாய்க்கோழி உதவியுடன் குஞ்சுகள் உடனடியாக எல்லா கரையானையும் தின்று விடும். கரையான் தின்று அரை மணி நேரத்திற்கு தண்ணீர் கொடுக்கக்கூடாது.

      ஒரு பானையில் சேரும் கரையான் 10-15 குஞ்சுகளுக்கு போதுமானது. கிடைக்கும் கரையானின் அளவு இடத்திற்கு இடம் மாறுபடும். செம்மண் பகுதியில் அதிகம் கிடைக்கும். அதிகம் தேவை என்றால் ஒன்றுக்கு மேல் எத்தனை பானைகள் வேண்டுமானாலும் கவிழ்த்து வைக்கலாம். மக்கள் கரையான் உற்பத்தியை காலங்காலமாக கோழிக்குஞ்சுத் தீவனத்திற்காக செய்தார்கள். இத் தொழில் நுட்பத்தை அறிவியல் நோக்கில் பார்க்கலாம்.



கரையான் செயலாற்றும் முறை

      இங்கு குறிப்பிடும் கரையான் ஈர மரக்கரையானாகும். (Dandy wood termites) மேலும் கரையான் ஆடு,மாடுகளைப் போல் நார்ப் பொருளை உண்டு வாழும் பூச்சியினமாகும். கரையானின் குடலிலும் நார்ப் பொருள்களைச் செரிக்க நுண்ணுயிரிகள் உண்டு. கரையான் சக்திக்கு நார்ப்பொருளையும், புரதத் தேவைக்கு மரக்கட்டையிலுள்ள பூஞ்சக்காளானையும் பயன்படுத்திக்கொள்கிறது.

      பானையிலுள்ள பொருட்களில் நீர் தெளிப்பது கரையான் எளிதில் தாக்க ஏதுவாக அமையும். கரையான்கள் பொதுவாக இரவில் அதிகமாக செயல்படும் என்பதால் மாலையில் பானை கவிழ்க்கப்படுகிறது. காலையில் சூரிய உதயத்திற்கு முன்பாக கரையானை எடுத்து விடுவது சிறந்தது. எறும்புகள் தாக்குதல் உள்ள பகுதியில் பகலில் அலைந்து திரியும் எறும்புகள் கரையானைத் தின்று விடும்.

      கரையான் சத்து மிக்கது. அதில் புரதம் 36%, கொழுப்பு 44.4%, மொத்த எரிசக்தி 560கலோரி/ 100கிராம் போன்றவை உள்ளன.

      சில வகை கரையானில் வளர்ச்சி ஊக்கி 20% உள்ளது. இதன் காரணமாகவே கோழிக் குஞ்சுகள் விரைந்து வளர்ந்து எடை கூடுகிறது. கோழிக் குஞ்சுகளுக்கு சிறந்த புரதம் செரிந்த தீவனமாக கரையான் அமைந்ததால், காலம் காலமாக தென் தமிழ்நாட்டு மக்களால் கரையான் உற்பத்தி செய்யப்பட்டது. இச்செயல்பாடுகளை ஆய்விட்டபோது பல கூடுதல் நன்மைகள் ஏற்படுவது தெரியவந்தது.

நன்மைகள்

      கரையான் உற்பத்திக்கு என்று பானை கவிழ்த்தும் போது கரையான்கள் வீடுகள், வீட்டுப் பொருட்கள் மற்றும் மரங்களைத் தாக்குவதில்லை. பானையிலிருந்து எழும் ஒரு வகை வாசனை கரையான்களை கவர்ந்து ஈர்க்கும். ஆகவே மற்ற இடங்களைத் தாக்குவதில்லை. பானையில் வைக்கும் நனைந்த பொருட்கள் மற்றும் சாணம் கரையான்களுக்கு மிக பிடித்துள்ளன. கரையானைப் பிடித்து அழிப்பதற்குப் பதில் கோழிக் குஞ்சுக்கு தீவனமாகக் கொடுத்து விடுகிறோம்.

      அடுத்து கரையானை ஒழிக்க கடுமையான பூச்சிக் கொல்லிகளைப் பயன்படுத்தும்போது சுற்றுச் சூழலும் பாதிக்கப்படுகிறது அல்லவா?

      முடிவாக கரையான் உற்பத்தி என்ற எளிய செலவற்ற ஒரு தொழில் நுட்பத்தால் மூன்று பயன்கள் விளைகின்றன.

1. செலவற்ற கோழிக்குஞ்சு தீவனம்.

2. வீட்டுப் பொருட்கள், மரங்களுக்குப் பாதுகாப்பு.

3. பூச்சிக் கொல்லிக்கு என்று செலவு கிடையாது. பூச்சிக் கொல்லி மருந்து தேவையில்லாததால் நமது சுற்றுப் புறச் சூழலும் பாதுகாக்கப்படுகிறது.

      இன்றே செயல்படுங்கள், மாலை செயல்பட்டால் மறுநாள் காலை உங்கள் கோழிக் குஞ்சுகளுக்குத் தேவையான கரையான் கிடைத்துவிடும்.

Wednesday, 19 June 2013

வெள்ளநீர்ப்பாய்ச்சல்

வெள்ளநீர்ப்பாய்ச்சல்

வெள்ளப் பாசன முறை முன்னோர்களால் பின்பற்றப்பட்ட பழைய முறையாகும். இது தான் பயிர்களை சாகுபடி செய்ய முதன் முதலில் பயன்படுத்தப்பட்ட பாசன முறை மற்றும் இந்த முறை இன்றும் பொதுவாக பயன்படுத்தப்படும் பாசன முறையாக உள்ளது. வயலுக்கு நீர் பள்ளம், குழாய் அல்லது வேறு வழியில் பாய்ச்சப்படுகிறது. வெள்ளைப் பாசன முறை பயனுள்ள பாசன முறையாக இருந்தாலும் இந்த முறை மற்ற முறைகளை விட பயன்பாடு குறைவாக உள்ளது. இந்த முறையில் அளிக்கப்படும் நீரில் பகுதி நீர் மட்டுமே பயிர்களுக்கு கிடைக்கிறது. மீதமுள்ள நீர் ஆவியாதல் வழிந்தோடும் நீர், நீர் உள்ளீர்ப்பு மற்றும் நீராவியாதல் மூலம் இழப்பு ஏற்படுகிறது.
மற்ற முறைகளைப் போன்று வெள்ளநீர்ப்பாய்ச்சல் முறை அதிக அளவு பயன்பாட்டில் இல்லையெனினும், கீழ்க்கண்ட உத்திகளைக் கையாண்டு அதன் பயன்பாட்டை அதிகரிக்கலாம்.

நிலத்தைச் சமப்படுத்துதல்


இம்முறையில் புவி ஈர்ப்பு விசை மூலமாகவே நீர் செலுத்தப்படுகிறது. ஆகையால் மேடான நிலங்களுக்குச் செல்வது கடினம் எனவே நிலம் நன்கு சமப்படுத்தப்படுதல் அவசியம்

அடுக்கு அலை நீர்பாய்ச்சல்


நீரை முழுவதும் சமப்படுத்திய நிலத்தில் ஒரே நேரத்தில் விடுவதை விட குறிப்பிட்ட கால இடைவெளியில் பாய்ச்சுவது மிகுந்த பயனளிக்கும்

மண் அரிப்பு சுழற்சி நிலப்பரப்பு பள்ளமாக இருக்கும் இடங்களில் அதிக நீர் என்று தேங்கியிருக்கும். அவ்வப்போது இந்நீரை மேடான இடங்களுக்கு இறைத்து ஊற்றினால் நன்கு பயன்படுத்திக் கொள்ள ஏதுவாகும்
பொதுவாக வெள்ளநீர்ப்பாசன முறையில் வயல் முழுவதும் நிறையும் வரை நீர்ப்பாய்ச்சுதல் செய்வர். இவ்வாறு செய்யும்போது மண் வகையைக் கவனிக்க வேண்டும். களிமண் போன்ற மண் வகைகளில் நீர் ஊடுருவுதல் குறைவு. இத்தகு சூழ்நிலையில் மண் அரிப்பு ஏற்பட வாய்ப்பகள் அதிகம். அதோடு வேர்மண்டலத்தைத் தாண்டி வெகு ஆழத்தில் சென்று விட்ட நீரினால், பயிருக்குப் பலனேதும் இல்லை

அடுக்கு நீர் முறையில் மண் ஈரப்பதம் அளவிடும் கருவிகள் பாசனத்திற்கு சரியான அளவீடுகளைக் கொடுக்கின்றன. இக்கருவிகள் நீர் குறிப்பிட்ட அளவை (மண்ணிற்கு தேவையான ஈரப்பதத்தை) அடைந்தவுடன் அதைக் குறியிட்டுக் காட்டி விடும். அதற்கு மேல் பாய்ச்சும் நீர் கீழே சென்று நீருடன் கலந்து விடும். இதைப் பயன்படுத்தி சரியான அளவு நீர்ப்பாய்ச்சுதல் அவசியம்.


நன்றி: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்

அடுக்குநீர்ப்பாசனம்

வெள்ளைப் பாசனம்
Add caption


அடுக்குநீர்ப்பாசனம் 

அதிக அழுத்த பாசன முறைகளான சொட்டு நீர் மற்றும் தெளிப்பு நீர்ப் பாசன முறைகள் இருந்தாலும் பாரம்பரிய முறையான மண்ணின் மேற்பரப்பில் பாசனம் செய்யும் முறை இன்றும் வழக்கத்தில் உள்ளது. இதனுடைய எளிமையான அமைப்பு முறை, அமைப்பதற்கான குறைந்த செலவு, மற்றும் செயல்படுத்தும் செலவு குறைவு என்பதாலும் இந்த முறை விவசாயிகளால் பின்பற்றப்பட்டு வருகின்றது. சிறிய வரிசை பள்ளம் மற்றும் தடுப்புப்பாத்தி அமைப்பு முறைகள் (தமிழ்நாட்டில் முக்கியமான பாசனமுறையாகும்) அல்லது செவ்வக வடிவ வயல்களில் குறுக்கு நெடுக்கு வரப்பு அமைத்து, வாய்க்கால் வழியே நீர்ப்பாய்ச்சப்படுகிறது. இந்த முறையில் நீர்ப் பாய்ச்சுவதற்கு நெடு நேரம் எடுத்துக் கொள்கிறது மற்றும் பாசன பயன்பாடு 55 - 65% அதிக கசிவு, ஆழமான துளை வழி கசிவு மற்றும் ஓடுநீர் இழப்பு (35 - 45%) குறைகிறது. இது மட்டுமல்லாமல் மேடு பள்ளம் உடைய குறுக்கு நெடுக்கு அமைப்பு முறையில் 15 - 25% நீர் இழப்பு ஏற்படுகிறது. இதைக் குறைப்பதற்கு அதிக நீர்ப்பாசனம் செய்வதைத் தடுப்பதற்கும் புதிய முறையாக அலைநீர் பாசனம் கோவை வேளாண்மைப் பல்கலைக்கழகத்தால் அதிக பரிசோதனைகள் செய்து 1992 – 95 ல் அதிக நீர் விசையியல் ஆய்வு மற்றும் பயிருக்கு ஓத்துப் போகிறதா என்றும் ஆய்வு செய்து இந்த முறை அறிமுகப்படுத்தப்பட்டது.

பண்புகள்


அடுக்கு நீர்ப்பாசனம் என்பது பார் பிடித்த வயல்களில் பாத்திகளின் வழியே நீர்ப்பாய்ச்சல் செய்வது ஆகும். இம்முறை நன்கு வரையறுக்கப்பட்ட ( 25மீ லிருந்து 200 மீ வரை) மடை அடைப்பு மற்றும் திறப்பு கொண்டு செயல்படுத்தப்படுகிறது. இம்முறையில் பாசனக் கால்வாயிலிருந்து நீரானது பிரதான பாத்தியினுள் பாய்கிறது. பிரதான பாத்தியிலிருந்து செல்லும் நீளமான பாத்தியினுள் செல்லும் இவ்வாறு செல்லும் நீரானது பாரின் மீது வளரும் பயிரின் வேர்களுக்கு எளிதில் உறிஞ்சக் கிடைக்கிறது. பாத்தியின் கடைக்கோடியில் 30-50 சதம் தண்ணீரே சென்று சேருகிறது. எனினும் இம்முறை சிறந்ததாகக் கருதப்படுகிறது. இம்முறையில் 80-85 சதவீத நீர்ப்பயிர்களுக்குக் கிடைக்கிறது. நீரின் வேகம் அதிகமாக இருக்கும் பகுதிகளில் பார்களைக் குறுக்கு நெடுக்குமாக அமைத்தால் நீரின் வேகத்தை மட்டுப் படுத்தலாம். இதனால் 5 சதவீத நீரின் இழப்பு குறைக்கப்படுகிறது. இம்முறை குறிப்பிட்ட கால இடைவெளியில் சுழற்சி முறையில் பின்பற்றப்படுகிறது.
அடுக்கு நீர் அலைப்பாசனம் பற்றி வேளாண் பல்கலைக்கழகத்தின் மதிப்பீடு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் பகுதி தானியங்கி மற்றும் தானியங்கி அடுக்கு நீர்ப் பாசனக் கருவிகளை அமைத்துள்ளது. இம்முறையில் ஒரு பாத்திக்கு நிமிடத்திற்கு 30 லிருந்து 120 லிட்டரும், மடை அடைப்பு மற்றும் திறப்பு 5 லிருந்து 30 நிமிடத்திற்கு ஒரு முறை, சுழற்சி வீதம் (0.25-0.66), பாத்தித் துகள்கள் (0.1-0.6) பாத்தி (30-120 செ.மீ.) , பாத்தியின் நீளம் (50-200 மீ) என்ற அளவிற்கு வசதிக்கேற்றவாறு மாற்றி அமைத்துக் கொள்ளலாம்.
மேலும் நீர்த் தேவைப்படும் காலத்தையும், நீர்ப்பரவல் தன்மையையும் கண்டறியும் ஒரு மாதிரியை (செந்தில்வேல் 1995) உருவாக்கியுள்ளனர்

மண் எற்புத்தன்மை :
 மணற்பாங்கான வண்டல் மண் மற்றும் வண்டல் மண்

பரிசோதித்த பயிர்கள் :
 மக்காச் சோளம், சூரியகாந்தி மற்றும் சோளம்

நீர் சேமிப்பு :
 25-40%

நில சேமிப்பு :
 15-25%

குறைபாடுகள்


அடுக்கு நீர் பாய்ச்சல் முறைகள் நல்ல களிமண் அல்லது மணற்பாங்கான நிலங்களில் அதிக வேறுபாடுகள் தோன்றும். அதோடு இம்முறை இந்தரியால் இன்னும் ஆரம்ப அளவிலேயே இருக்கிறது. விரிவாக்கப் பணிகள் மூலம் பிரபலப்படுத்தப்படவேண்டியது அவசியம் ஆகும்.

நன்றி: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்

தெளிப்பு நீர்ப் பாசனம்


தெளிப்பு நீர்ப் பாசனம்

1.செயல்கள்நிலப்பரப்பிற்கு மேலே நீரை மழைபெய்வது போல் பம்ப் உதவியுடன் தெளிக்க செய்கிறது
2.தனிக்குறிப்பீடு
  • குறைவான அழுத்தம் (1.0 கிலோ / செ.மீ2 ) ஒரு தெளிப்பானை செயல்படுத்த தேவைப்படுகிறது. ஒரு தெளிப்பான் மூலம் 12 மீ சுற்று வட்டாரம் வரை தெளிக்கலாம்
  • 4 – 5 கிலோ / செ.மீ2 அழுத்தம், 4 தெளிப்பானை ஒரே நேரத்தில் பயன்படுத்த தேவைப்படுகிறது
  • காற்றின் வேகம் 15 கிலோ மீட்டர் / மணி குறைவாக இருக்கும்போது செயல்படுத்துவது எளிதாகிறது. இதனால் நீர் இழப்பைத் தடுக்கலாம்
  • அதிகாலை மற்றும் மாலை வேளைகளில் தெளிப்பானைப் பயன்படுத்துவதால் ஆவியாகுதல் இழப்பைத் தடுக்கலாம்
3.விலைதோராயமாக ரூ. 3000 – 4000 / ஹெக்டேர்
4.சிறப்பியல்புகள்
  • மலைப்பகுதிகளில் மேடு பள்ளம் இல்லாத பகுதிகளுக்கு ஏற்றது
  • மலைத் தோட்டப் பயிர்களான தேயிலை, காபி மற்றும் இதரப் பயிர்களுக்கு ஏற்றது
  • நிலக்கடலை, பருத்தி, முன்பே பூ உதிராத பயிர்களுக்கு ஏற்றது
  • பாரம்பரிய பாசனத்தை விட 30 – 40 % செலவு குறைகிறது
தெளிப்பு நீர்ப் பாசனத்தில் பயிர்களுக்கான நீர் தேவை
பயிர்நீர் உபயோகம் (மி.மீ)நீர் சேமிப்புநீர் பயன்பாடு கி.எக்.மி.மீ
நிலக்கடலை39024.75.13
பருத்தி3085059.8
சோயா38050.54.77
உளுந்து14050.08.82
5. பொதுவான பிரச்சனைகள் மற்றும் வழிமுறைகள்

அ,தெளிப்பு நீர்ப்பசானம் அமைக்க ஆரம்ப செலவுகள் அதிகம், எனினும் இந்த அமைப்பு குறைந்தது 10 ஆண்டுகள் வரை நன்கு பயன்படக் கூடியவை

ஆ,நம் நாட்டில் பெரும்பான்மையான  விவசாயிகள் சிறு மற்றும் குறுநிலங்களையே கொண்டுள்ளனர். இதற்கு பல விவசாயிகள் ஒரு குழுவாக இணைந்து அமைத்தால் செலவை குறைக்கலாம்

இ,தெளிப்பான் ஒன்று 12 மீ வரை நீர் தெளிக்கக் கூடியது. இதற்கு 1 கி.கி /ஒரு சதுர செ.மீ. அழுத்தம் தேவைப்படுகிறது.

ஈ,காற்று அதிகமாக வீசும்போது தெளிப்பானின் திசை மற்றும் வேகம் மாற வாய்ப்புள்ளது. காற்று வீசும் சமயங்களில் அடிக்கடி மேற்பார்வையிடும்போது இதனைச் சரி செய்து கொள்ளலாம்.

நன்றி: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்

சொட்டு நீர் பாசனம்



சொட்டு நீர் பாசனம்
அ. செயல்கள்:

பயிர்களுக்கு நீரை அழுத்தத்துடன் வலைப்பின்னல் குழாய் வழியாக வழங்குகின்ற முறையாகும்.

ஆ. உபகரணங்கள்:

முக்கிய பகுதியில் மேல் நிலைத் தொட்டி இருக்கும்.

முக்கிய குழாய் பகுதியில் 50 மி.மீ, 75 மி.மீ, எச். டி. பி. இ அல்லது பி.வி.சி குழாய்கள் பயன்படுத்தப்படுகின்றன.

துணை குழாய் பகுதியில் 45 மி.மீ, 50 மி.மீ எச்.டி.பி.இ. குழாய்கள் பயன்படுத்தப் படுகின்றன.

பக்கவாட்டில், 12 மி.மீ, 16 மி.மீ, எல்.எல்.டி.பி.இ பயன்படுத்தப்படுகின்றன.

சொட்டு குழாய்கள்
 – 2 எல்.பி.எச், 4 எல்.பி.எச், 8 எல்.பி.எச் அழுத்தமுடைய வகைகள் மிகவும் ஏற்றது.

வடிக்கும் பகுதி: பெரிய மண் துகள்களை வடிக்க மணல் வடிப்பான் பயன்படுத்தப்படுகிறது. சல்லடை வடிப்பான் (120 மைக்ரான் அளவு) நுண்ணிய துகள்களை வடிக்க பயன்படுகிறது.

உர பகுதி: கரைத்த உரங்கள் அல்லது நீர்ம உரங்களை அளிப்பதற்கு உரத் தொட்டி பயன்படுகிறது. அழுத்தமானி 0.5 முதல் 2.5 கே.எஸ்.சி மற்றும் குழாயின் அளவைப் பொறுத்து கதவுத் தடுப்பு பயன்படுகிறது. இதனால் நீரின் ஓட்டத்தைக் கட்டுப்படுத்தவும், கலனிக்காகவும் முடிகிறது. 
இ.கவனிக்க வேண்டியவை
1.சாதாரண முறையைக் காட்டிலும் 50-65 சதம் வரை நீர் சேமிக்கப்படுகிறது
2. பயிர் எளிதில் வளர்ச்சி அடைகிறது
3. அதிக உற்பத்தி மற்றும் உயர்ந்த தரம்
4. நிலத்தை ஒரளவு சமப்படுத்தினாலலே போதுமானது நடை முறை நீர்ப்பாசனம் போன்று சரிசமமாகச் செய்ய வேண்டிய அவசியமில்லை
5. சாதாரண, தண்ணீரையே பயன்படுத்தலாம். நல்ல தண்ணீரை மட்டுமே உபயோகிக்க வேண்டிய அவசியம் இல்லை

ஈ.விலை


நீர்த் தேவை (லி எக்டர்), உற்பத்தி அதிகரிப்பு, நீர் சேமிப்பு (சதவீதம்) பக்க இடைவெளி மற்றும் செலவீனங்களை ஆகியவை கீழ்க்கண்ட அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளன.

அட்டவணை : 1
பயிர்கள்நீர்த் தேவை (லிட்)சதவீதம்பக்கக்குழாய் (மீ)செலவு ரூ/எக்டர்
சொட்டுநீர்பழைய முறைஉற்பத்தி அதிகரிப்புநீர் சேமிப்பு
தென்னை75-100200-30030457.5030,000
கொய்யா25-4590-10023483.050,000
மா30-5090-150234010.028,000
சப்போட்டா20-3070-100405010.028,000
மாதுளை20-4060-13048455.034,000
வாழை8-1230-4052452.056,000
எலுமிச்சை10-2025-6540603.050,000
பப்பாளி5-818-2675682.056,000
கத்திரி1-24-814531.2075,000
வெண்டை1-24-616401.2075,000
தக்காளி1-24-680391.2075,000
மிளகாய்1-23-644621.2075,000
பூசணி வகைகள்1-23-615541.2075,000


நன்றி: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்

Thursday, 13 June 2013

உழவர் மன்றம்



Tuesday, 11 June 2013

விவசாய கண்காட்சி

ஆண்டுதோறும் நடைபெறும் மாபெரும் விவசாய கண்காட்சி இந்த வருடம் வரும் 11-07-2013 வியாழன் முதல் 14-07-2013 ஞாயிறு வரை கோவையில் உள்ள கொடிசியா அரங்கத்தில் விவசாய கண்காட்சி நடைபெற இருக்கிறது. வேளாண்மை துறையின் புதிய வளர்ச்சிகள்,கண்டுபிடிப்புகள் என பல புதிய வேளாண்மை செய்திகளை இதில் பங்கு பெறுவதன் மூலம் நாம் தெரிந்துகொள்ளலாம்.

http://sreekaviyafarms.blogspot.in/
விவசாய கண்காட்சி

Friday, 7 June 2013

ஒருகிணைந்த பண்ணையம்

ஒருகிணைந்த பண்ணையம்:

இந்த பதிவு உங்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும்!!!!!!!!!

Thursday, 6 June 2013

பன்றி வளர்ப்பு

பன்றி வளர்ப்பு பற்றிய வீடியோ