நாட்டுகோழி விற்பனைக்கு

திறந்த வெளியில் வளர்க்கப்பட்ட நாட்டுகோழி,நாட்டுகோழிமுட்டை,நாட்டுகோழி குஞ்சு விற்பனைக்கு

Country Chicken For Sales

Country Chicken,Hen, Egg, Goat, and Chicken For sales.

நாட்டுக்கோழி வளர்ப்பு

நாட்டுக்கோழி, ஆடு வளர்ப்பு, பசுந்தீவன உற்பத்தி, அசோலா, கோ-4, கரையான் உற்பத்தி மற்றும் இயற்கை வேளாண்மை

இயற்கை வேளாண்மை

அசோலா உற்பத்தி, மண்புழு உரம், பஞ்சகாவிய, ஜீவமிர்தம், அமிர்தக்கரைசல் மற்றும் வேளாண்மை குறித்த தகவல்கள்

ORGANIC FARMING;

Vermi compost, Azolla , Organic farming

Saturday, 9 November 2013

அக்னி அஸ்திரம் எப்படி தயாரிப்பது?

வேளாண் வித்தகர் சுபாஷ் பாலேகர் ஐயா வழிகாட்டுதல்


~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

தயாரிக்க தேவையான பொருட்கள் :
###############################
புகையிலை அரை கிலோ,
பச்சை மிளகாய் அரை கிலோ,
வேம்பு இலை 5 கிலோ நாட்டு பசுமாட்டு சிறுநீர் (கோமியம்) 15 லிட்டர் மற்றும் மண்பானை.

தயாரிக்கும் முறை:
################
நாட்டு பசுமாட்டு சிறுநீர் (கோமியம்)15 லிட்டர், புகையிலை அரை கிலோ, பச்சை மிளகாய் அரை கிலோ, வேம்பு இலை 5 கிலோ இவற்றை மண்பானையில் (வேறு பாத்திரங்கள் பயன்படுத்தக்கூடாது ) போட்டு நன்றாக கொதிக்க வைக்கவேண்டும் நான்கு முறை மிண்டும் மிண்டும் கொதிக்க வைக்கவேண்டும். இறக்கியபிறகு, பானையின் வாயில் துணியைக் கொண்டு கட்டி 48மணி நேரம் அப்படியே வைத்துவிடவேண்டும் நீரின் மேல் ஒரு ஏடு போல் ஆடை படியும். அதை நீக்கி விட்டால் உள்ளே இருக்கும் தெளிந்த நீர்தான் அக்னி அஸ்திரம். இக்கரைசலை 3 மாதம் வரை பாட்டிலில் சேமித்து வைக்கலாம்.

அக்னி அஸ்திரம் எப்படி பயன்படுத்துவது?
#################################
100 லிட்டர் நீரில்,.3 லிட்டர் அக்னி அஸ்திரம், 3லிட்டர் கோமியம் கலந்து பயிர்கள் மேல் தெளித்தால் போதும் புழு, புச்சிகள் காணாமல் போய்விடும்.

அக்னி அஸ்திர நன்மைகள் என்ன?
############################
1. பயிர்களில் காய்ப்புழு, தண்டு துளைப்பான் போன்ற புழுக்களைக் கட்டுப்படுத்த அக்னி அஸ்திரம் தெளிக்கலாம்.
2. எல்லா வகை பயிர்களுக்கும் பயன்படுத்தலாம். எந்த கட்டுப்பாடும் இல்லை.

Monday, 7 October 2013

புறக்கடையில் நாட்டுக்கோழி வளர்ப்பு


புறக்கடையில் நாட்டுக்கோழி வளர்ப்பு


பரண்மேல் வெள்ளாடு வளர்ப்பு -- காணொளி

பரண்மேல் வெள்ளாடு வளர்ப்பு

எலி ஒழிப்பில் இயற்கை உத்திகள்

எலி ஒழிப்பில் இயற்கை உத்திகள்

எலிகளின் வாழ்க்கை முறை: நன்செய் மற்றும் புன்செய் நிலங்களில் காணப்படும்
சிறிய பெருச்சாளிகள் முதுகுப்பகுதி கரும்பழுப்பு நிறத்துடன் சிறிய வாலுடனும்
காணப்படும். இவைகளில் கருத்தரிக்கும் காலம் 4 நாட்கள் ஆகும். கருத்தரித்த 22
நாட்களில் 1 முதல் 11 குட்டிகளை ஈணும். எலிக்குட்டியானது பிறந்த 3 மாதத்திற்கு
உள்ளாகவே கருத்தரிக்க தயாராகி விடுகிறது. கதிர் முற்றும் மற்றும் அறுவடைக்
காலமான அக்டோபர், நவம்பர் மாதங்களில்தான் அதிகமான அளவில் இனச்சேர்க்கை செய்து
குட்டிகளை ஈணுகிறது. சராசரியாக ஒரு ஆண்டிற்கு 100 குட்டிகள் வரை இனப்பெருக்கம்
இருக்கும்.

*எலி ஒழிப்பு உத்திகள்*

வயல் வெளியில்: ணு பயிர் அறுவடை முடிந்தவுடன் எலி வளைகளை வெட்டி எலிகளை
அழிக்கலாம்.
* ஆழமாக உழுவதன் மூலம் எலிவளைகளை அழித்து எலிகளை ஒழிக்கலாம்.
* வயல்களில் குறுகிய வரப்புகளை அமைத்து எலிகள் வளைகளை அமைப்பதை தவிர்க்கலாம்.
* வயல்களுக்கு அருகிலுள்ள புதர்களை அழித்து எலிகள் தங்குவதை தவிர்க்கலாம்.
* வைக்கோல் படப்புகளையும் பருத்தி மார் போன்றவைகளையும் வயல்களுக்கு அருகில்
வைக்கக்கூடாது.
* ஆந்தைகள் எலிகளை பிடித்து இரையாக உண்ணும். எனவே, அவைகள் வயல்களில் அமர்ந்து
எலிகளை பிடித்து உண்பதற்கு ஏதுவாக "டி' வடிவ குச்சிகளை நட்டு வைக்க வேண்டும்.
* தண்ணீர் அதிகம் பாய்ச்சி வளைக்குள் இருக்கும் எலிகளை மூச்சுத்திணறச் செய்து
விரட்டியடிக்கலாம்.
* இரவு வேளைகளில் விளக்குகளை பயன்படுத்தி விளக்கின் வெளிச்சத்தினால் ஓடாமல்
நிற்கும் எலிகளை அடித்துக் கொல்லலாம்.
* எலிகளை பாம்புகள் பிடித்துத் திண்பதால் பாம்புகளை அழிப்பதை தவிர்க்கலாம்.
* கிட்டிகள் வைத்து எலிகளை பிடித்து அழிக்கலாம்.
* வாய் அகன்ற பானைகளில் சாணம் கலந்த நீரை நிரப்பி மேற்பரப்பில் சோறு
போட்டுவைத்தால் அவற்றை உண்ணவரும் எலிகள் அந்த சாண நீரில் வீழ்ந்து மூழ்கி
இறந்துவிடும்.
தொடர்பு: ச.கண்ணையா, வேளாண்மை அலுவலர், பரமக்குடி. 04564-226 915.

நன்றி: தினமலர்

Thursday, 18 July 2013

ஆடுகளுக்கான மூலிகை வைத்தியம்

http://sreekaviyafarms.blogspot.in/
ஆடுகளுக்கான மூலிகை வைத்தியம்


கழிசலுக்கு கத்திரி... சளிக்கு கண்டங்கத்திரி!

ஆடுகளுக்கான மூலிகை வைத்தியம் சித்த மருத்துவர்: ராஜமாணிக்கம்,

 ''ஆடுகளுக்குச் சரியான நேரத்துல குடல்புழு நீக்கலனா, மெலிஞ்சு போயிடும். கால்படி அளவு சூபாபுல் (சவண்டல்) விதையை, 24 மணி நேரம் தண்ணியில ஊற வெச்சு, அதுல இருந்து 50 மில்லி தண்ணிய எடுத்து ஆட்டுக்குக் கொடுத்தா போதும். குடல்புழு வெளிய வந்துடும்.

வேப்பிலை, மஞ்சள், துளசி இது மூணையும் சம அளவு எடுத்து அரைச்சி, நெல்லிக்காய் அளவு கொடுத்தா... வாய்ப்புண் ஆறிடும்.

காய்ச்சல் வந்த ஆடுகளுக்கு, 3 சின்ன வெங்காயம், 5 மிளகு, ஒரு வெற்றிலையை ஒண்ணா வெச்சு கொடுத்தா... சரியாகிடும்.

50 மில்லி நெய்யை மூணு நாளைக்குக் கொடுத்துட்டு வந்தா... தொண்டை அடைப்பான் சரியாகிடும்.

கொழிஞ்சியை அரைச்சி ஒரு கொய்யாப்பழ அளவுக்குக் கொடுத்தா... விஷக்கடி சரியாகிடும்.
ஆடுகளுக்கு வர்ற பெரிய பிரச்னை கழிச்சல். இதுக்கு ரொம்ப கஷ்டப்பட வேணாம். 5 கத்திரிக்காயைச் சுட்டு தின்னக் கொடுத்தா போதும். கழிசல் காணாம போயிடும்.

கண்டங்கத்திரிப் பழத்தை ஒரு கைப்பிடி அளவு எடுத்து, வெள்ளாட்டுக் கோமியத்துல 24 மணி நேரம் ஊறவெச்சு, சாறு எடுத்து, மூணு சொட்டு மூக்குல விட்டா மூக்கடைப்பு, சளி எல்லாம் சரியாகிடும்.

சீதாப்பழ மர இலையை ஆடுக மேல தேய்ச்சி விட்டா பேன் எல்லாம் ஓடிடும்.

ஜீரண கோளாறு வந்தா, 300 மில்லி தேங்காய் எண்ணெய் கொடுத்தா சரியாகிடும். நல்லெண்ணெயும், மஞ்சளும் கலந்து தடவுனா கழலை போயிடும்'' என்று வரிசையாக பட்டியலிட்டுவிட்டு,

''ஆடுகளுக்குத் தேவையான கை வைத்தியத்தைத் தெரிஞ்சு வெச்சுகிட்டா... அவசரத்துக்கு டாக்டரைத் தேடி அலையாம, நீங்களே ஆடுகள காப்பாத்திடலாம்'' என்று நம்பிக்கையூட்டினார்.



நன்றி: சித்த மருத்துவர்: ராஜமாணிக்கம்,  9943265061

Thursday, 20 June 2013

நாட்டுக் கோழிகளுக்கு கரையான் தீவனம்


      கரையானின் தீமைகள் குறித்தே அறிந்த பலருக்கு கரையான் தீவனமாகப் பயன்படும் என்றால் ஆச்சரியமாகத்தானே இருக்கும். நாட்டுக் கோழி வளர்ப்பவர்களுக்கு கரையான் சிறந்த உணவாக பயன்படுகிறது. கரையான் உற்பத்தி செய்து கோழிக் குஞ்சுகளுக்குத் தீனியாகக் கொடுத்தால், கரையான் சாப்பிட்ட குஞ்சுகள் மற்ற குஞ்சுகளைவிட இருமடங்காக வளர்ச்சியடையும்.

 
http://sreekaviyafarms.blogspot.in
கரையான்

தேவையான பொருட்கள்

      1. ஒரு பழைய பானை

      2. கிழிந்த கோணி/சாக்கு

      3. காய்ந்த சாணம்

      4. கந்தல் துணி, இற்றுப்போன கட்டை, மட்டை, காய்ந்த இலை, ஓலை போன்ற நார்ப்பொருட்கள்



கரையான் உற்பத்தி செய்முறை

      மேற்கண்டவற்றை பழைய பானையினுள் திணித்து சிறிது நீர் தெளித்து வீட்டிற்கு வெளியே தரையில் கவிழ்த்து வைத்துவிட வேண்டும். முதல் நாள் மாலை கவிழ்த்து வைத்தால் மறுநாள் காலை திறந்து பார்த்தால் தேவையான கரையான் சேர்ந்திருக்கும். தாய்க்கோழி உதவியுடன் குஞ்சுகள் உடனடியாக எல்லா கரையானையும் தின்று விடும். கரையான் தின்று அரை மணி நேரத்திற்கு தண்ணீர் கொடுக்கக்கூடாது.

      ஒரு பானையில் சேரும் கரையான் 10-15 குஞ்சுகளுக்கு போதுமானது. கிடைக்கும் கரையானின் அளவு இடத்திற்கு இடம் மாறுபடும். செம்மண் பகுதியில் அதிகம் கிடைக்கும். அதிகம் தேவை என்றால் ஒன்றுக்கு மேல் எத்தனை பானைகள் வேண்டுமானாலும் கவிழ்த்து வைக்கலாம். மக்கள் கரையான் உற்பத்தியை காலங்காலமாக கோழிக்குஞ்சுத் தீவனத்திற்காக செய்தார்கள். இத் தொழில் நுட்பத்தை அறிவியல் நோக்கில் பார்க்கலாம்.



கரையான் செயலாற்றும் முறை

      இங்கு குறிப்பிடும் கரையான் ஈர மரக்கரையானாகும். (Dandy wood termites) மேலும் கரையான் ஆடு,மாடுகளைப் போல் நார்ப் பொருளை உண்டு வாழும் பூச்சியினமாகும். கரையானின் குடலிலும் நார்ப் பொருள்களைச் செரிக்க நுண்ணுயிரிகள் உண்டு. கரையான் சக்திக்கு நார்ப்பொருளையும், புரதத் தேவைக்கு மரக்கட்டையிலுள்ள பூஞ்சக்காளானையும் பயன்படுத்திக்கொள்கிறது.

      பானையிலுள்ள பொருட்களில் நீர் தெளிப்பது கரையான் எளிதில் தாக்க ஏதுவாக அமையும். கரையான்கள் பொதுவாக இரவில் அதிகமாக செயல்படும் என்பதால் மாலையில் பானை கவிழ்க்கப்படுகிறது. காலையில் சூரிய உதயத்திற்கு முன்பாக கரையானை எடுத்து விடுவது சிறந்தது. எறும்புகள் தாக்குதல் உள்ள பகுதியில் பகலில் அலைந்து திரியும் எறும்புகள் கரையானைத் தின்று விடும்.

      கரையான் சத்து மிக்கது. அதில் புரதம் 36%, கொழுப்பு 44.4%, மொத்த எரிசக்தி 560கலோரி/ 100கிராம் போன்றவை உள்ளன.

      சில வகை கரையானில் வளர்ச்சி ஊக்கி 20% உள்ளது. இதன் காரணமாகவே கோழிக் குஞ்சுகள் விரைந்து வளர்ந்து எடை கூடுகிறது. கோழிக் குஞ்சுகளுக்கு சிறந்த புரதம் செரிந்த தீவனமாக கரையான் அமைந்ததால், காலம் காலமாக தென் தமிழ்நாட்டு மக்களால் கரையான் உற்பத்தி செய்யப்பட்டது. இச்செயல்பாடுகளை ஆய்விட்டபோது பல கூடுதல் நன்மைகள் ஏற்படுவது தெரியவந்தது.

நன்மைகள்

      கரையான் உற்பத்திக்கு என்று பானை கவிழ்த்தும் போது கரையான்கள் வீடுகள், வீட்டுப் பொருட்கள் மற்றும் மரங்களைத் தாக்குவதில்லை. பானையிலிருந்து எழும் ஒரு வகை வாசனை கரையான்களை கவர்ந்து ஈர்க்கும். ஆகவே மற்ற இடங்களைத் தாக்குவதில்லை. பானையில் வைக்கும் நனைந்த பொருட்கள் மற்றும் சாணம் கரையான்களுக்கு மிக பிடித்துள்ளன. கரையானைப் பிடித்து அழிப்பதற்குப் பதில் கோழிக் குஞ்சுக்கு தீவனமாகக் கொடுத்து விடுகிறோம்.

      அடுத்து கரையானை ஒழிக்க கடுமையான பூச்சிக் கொல்லிகளைப் பயன்படுத்தும்போது சுற்றுச் சூழலும் பாதிக்கப்படுகிறது அல்லவா?

      முடிவாக கரையான் உற்பத்தி என்ற எளிய செலவற்ற ஒரு தொழில் நுட்பத்தால் மூன்று பயன்கள் விளைகின்றன.

1. செலவற்ற கோழிக்குஞ்சு தீவனம்.

2. வீட்டுப் பொருட்கள், மரங்களுக்குப் பாதுகாப்பு.

3. பூச்சிக் கொல்லிக்கு என்று செலவு கிடையாது. பூச்சிக் கொல்லி மருந்து தேவையில்லாததால் நமது சுற்றுப் புறச் சூழலும் பாதுகாக்கப்படுகிறது.

      இன்றே செயல்படுங்கள், மாலை செயல்பட்டால் மறுநாள் காலை உங்கள் கோழிக் குஞ்சுகளுக்குத் தேவையான கரையான் கிடைத்துவிடும்.

Wednesday, 19 June 2013

வெள்ளநீர்ப்பாய்ச்சல்

வெள்ளநீர்ப்பாய்ச்சல்

வெள்ளப் பாசன முறை முன்னோர்களால் பின்பற்றப்பட்ட பழைய முறையாகும். இது தான் பயிர்களை சாகுபடி செய்ய முதன் முதலில் பயன்படுத்தப்பட்ட பாசன முறை மற்றும் இந்த முறை இன்றும் பொதுவாக பயன்படுத்தப்படும் பாசன முறையாக உள்ளது. வயலுக்கு நீர் பள்ளம், குழாய் அல்லது வேறு வழியில் பாய்ச்சப்படுகிறது. வெள்ளைப் பாசன முறை பயனுள்ள பாசன முறையாக இருந்தாலும் இந்த முறை மற்ற முறைகளை விட பயன்பாடு குறைவாக உள்ளது. இந்த முறையில் அளிக்கப்படும் நீரில் பகுதி நீர் மட்டுமே பயிர்களுக்கு கிடைக்கிறது. மீதமுள்ள நீர் ஆவியாதல் வழிந்தோடும் நீர், நீர் உள்ளீர்ப்பு மற்றும் நீராவியாதல் மூலம் இழப்பு ஏற்படுகிறது.
மற்ற முறைகளைப் போன்று வெள்ளநீர்ப்பாய்ச்சல் முறை அதிக அளவு பயன்பாட்டில் இல்லையெனினும், கீழ்க்கண்ட உத்திகளைக் கையாண்டு அதன் பயன்பாட்டை அதிகரிக்கலாம்.

நிலத்தைச் சமப்படுத்துதல்


இம்முறையில் புவி ஈர்ப்பு விசை மூலமாகவே நீர் செலுத்தப்படுகிறது. ஆகையால் மேடான நிலங்களுக்குச் செல்வது கடினம் எனவே நிலம் நன்கு சமப்படுத்தப்படுதல் அவசியம்

அடுக்கு அலை நீர்பாய்ச்சல்


நீரை முழுவதும் சமப்படுத்திய நிலத்தில் ஒரே நேரத்தில் விடுவதை விட குறிப்பிட்ட கால இடைவெளியில் பாய்ச்சுவது மிகுந்த பயனளிக்கும்

மண் அரிப்பு சுழற்சி நிலப்பரப்பு பள்ளமாக இருக்கும் இடங்களில் அதிக நீர் என்று தேங்கியிருக்கும். அவ்வப்போது இந்நீரை மேடான இடங்களுக்கு இறைத்து ஊற்றினால் நன்கு பயன்படுத்திக் கொள்ள ஏதுவாகும்
பொதுவாக வெள்ளநீர்ப்பாசன முறையில் வயல் முழுவதும் நிறையும் வரை நீர்ப்பாய்ச்சுதல் செய்வர். இவ்வாறு செய்யும்போது மண் வகையைக் கவனிக்க வேண்டும். களிமண் போன்ற மண் வகைகளில் நீர் ஊடுருவுதல் குறைவு. இத்தகு சூழ்நிலையில் மண் அரிப்பு ஏற்பட வாய்ப்பகள் அதிகம். அதோடு வேர்மண்டலத்தைத் தாண்டி வெகு ஆழத்தில் சென்று விட்ட நீரினால், பயிருக்குப் பலனேதும் இல்லை

அடுக்கு நீர் முறையில் மண் ஈரப்பதம் அளவிடும் கருவிகள் பாசனத்திற்கு சரியான அளவீடுகளைக் கொடுக்கின்றன. இக்கருவிகள் நீர் குறிப்பிட்ட அளவை (மண்ணிற்கு தேவையான ஈரப்பதத்தை) அடைந்தவுடன் அதைக் குறியிட்டுக் காட்டி விடும். அதற்கு மேல் பாய்ச்சும் நீர் கீழே சென்று நீருடன் கலந்து விடும். இதைப் பயன்படுத்தி சரியான அளவு நீர்ப்பாய்ச்சுதல் அவசியம்.


நன்றி: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்