நாட்டுகோழி விற்பனைக்கு

திறந்த வெளியில் வளர்க்கப்பட்ட நாட்டுகோழி,நாட்டுகோழிமுட்டை,நாட்டுகோழி குஞ்சு விற்பனைக்கு

Country Chicken For Sales

Country Chicken,Hen, Egg, Goat, and Chicken For sales.

நாட்டுக்கோழி வளர்ப்பு

நாட்டுக்கோழி, ஆடு வளர்ப்பு, பசுந்தீவன உற்பத்தி, அசோலா, கோ-4, கரையான் உற்பத்தி மற்றும் இயற்கை வேளாண்மை

இயற்கை வேளாண்மை

அசோலா உற்பத்தி, மண்புழு உரம், பஞ்சகாவிய, ஜீவமிர்தம், அமிர்தக்கரைசல் மற்றும் வேளாண்மை குறித்த தகவல்கள்

ORGANIC FARMING;

Vermi compost, Azolla , Organic farming

Wednesday, 5 June 2013

ஆடுகளில் நீலநாக்கு நோய் விபரமும் தடுக்கும் வழிமுறைகளும்

ஆடுகளில் நீலநாக்கு நோய் விபரமும் தடுக்கும் வழிமுறைகளும்

நீலநாக்கு நோய் எல்லா ஆடுகளுக்கும் வரும் என்றாலும், செம்மறி ஆடுகளில்தான் அதிக சேதத்தை ஏற்படுத்தும். நம்முடைய ஆட்டு மந்தையையும், பொருளாதாரத்தையும் காக்க வேண்டுமாயின், இந்நோய் குறித்த விளக்கங்களை தெரிந்துகொள்வது அவசியம்.
நோயின் அறிகுறிகள்:
நோயுற்ற ஆடுகளில் உடல் வெப்பநிலை உயர்ந்து (காய்ச்சல்) அவை நடுக்கத்துடன் காணப் படும். உடல் வெப்பநிலை 105 முதல் 107 டிகிரி பாரன்ஹீட் வரை இருக்கும். மூக்கின் வழியாக தண்ணீர் போன்ற திரவம் ஒழுகும். இத்திரவமானது பின்னர் 2-3 தினங்களில் சளியாக மாறும். மூக்குச்சளி பின்னர் காய்ந்து கட்டியாகி நாசித் துவாரங்களை அடைத்துவிடுவதால் ஆடுகள் மூச்சுவிட சிரமப்படும். வாயின் உட்பகுதி, ஈறுகள், நாக்கு, நாசித் துவாரங்களின் உட்பகுதிகளில் புண்கள் காணப்படும். நாளடைவில் நாக்கு வீக்கம் கண்டு வாயின் வெளிப்பகுதியில் நீண்டு “”நீலநிறமாக” மாறிவிடும். காதுமடல், கழுத்து, தாடை மற்றும் உதட்டுப்பகுதியில் வீக்கம் காணப்படும். கால்களில் குளம்புகளுக்கு சற்று மேல் கரோனட்டின் உட்பகுதியில் வீக்கம் ஏற்படுவதால் ஆடுகள் வலியுடன் நொண்டி நடக்கும். கழுத்துப்பகுதி பாதிக்கப் படுவதால் ஆடுகள் கழுத்தினை வளைத்து ஒரு பக்கமாக இழுத்து காணப்படும். பாதிக்கப்பட்ட ஆடுகளில் ரத்தக்கழிச்சலும் காணப்படும்.
நோயினால் ஏற்படும் இழப்பு: செம்மறி ஆடுகளில் பெரும் இழப்பை உண்டுபண்ணும் நோய்களில் நீலநாக்கு நோய் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. இதில் 20-70 சதவீதம் வரை இறப்பு நேரிட வாய்ப்பு உண்டு. நோய் கண்ட ஆடுகளில் தசைகள் பாதிக்கப்படுவதால் தசைகளின் தரம் முற்றிலுமாக குறைந்து ஆட்டு இறைச்சியின் எடை பெரிதும் குறைந்துவிடும். சினை ஆடுகளில் கருச்சிதைவு ஏற்படும். சில சமயம் பிறவி குறைபாடுகளு டன் குட்டி பிறப்பதால் அதுவே மறைமுகமாக பெரும் இழப்பை உண்டாக்கிவிடும்.
தடுப்பு முறைகள்:
இந்நோய்க்கு தற்சமயம் “தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம்” தடுப்பூசி மருந்தினை தயாரித்துள்ளது. முறையாக அணுகினால் தடுப்பூசியினை நாமும் பெற்று பயனடையலாம். மேலும், நோயைத் தவிர்க்க கீழ்க்கண்ட பராமரிப்பு முறைகளை பின்பற்ற வேண்டும்.
  • நோய் கண்ட ஆட்டினை தனியே பிரித்து நன்கு பராமரிக்க வேண்டும். மேய்ச்சலுக்கு விடக்கூடாது.
  • நோய்கண்ட ஆடுகள் தீவனம் உண்ணமுடியாமல் இருப்பதால் அவைகளுக்கு அரிசி, கம்பு, கேழ்வரகு ஆகியவற்றின் கஞ்சியினை நீர்ஆகாரம் போன்று கொடுக்க வேண்டும்.
  • வாய், நாக்கு மற்றும் கால்களில் ஏற்பட்டுள்ள புண்களை பொட்டாசியம் பெர்மாங்கனேட் கரைசல் அல்லது சாதாரண உப்பு கரைசல் கொண்டு நன்றாக கழுவ வேண்டும்.
  • 100 மி.லி. கிளிசரினில் 10 கிராம் போரிக் ஆசிட் பவுடரை கலக்கி வாயில் உள்ள புண்களுக்கு தடவ வேண்டும். காலில் உள்ள புண்களுக்கு போரிக் ஆசிட் மருந்தினை வேப்பெண்ணெயில் கலந்து தடவ வேண்டும்.
  • ஊசி மூலம் இந்நோய்க் கிருமிகள் பரவும் தன்மை கொண்டிருப்பதால்ஊசி மூலம் மருந்து அளிப்பதை தவிர்க்க வேண்டும்.
  • பூச்சிகள் மூலம் இந்நோய் பரவுவதால், பூச்சி மருந்தினைப் பயன்படுத்தி தடுக்க வேண்டும்.
  • கால்நடை மருத்துவரின் ஆலோசனையின்படி சல்பா, டெட்ராசைக்ளின் போன்ற மருந்தினை மூன்று நாட்களுக்கு தொடர்ந்து கொடுக்க வேண்டும்.

மண் புழு உரம் தயாரிப்பு

மண் புழு உரம் தயாரிப்பு:

http://sreekaviyafarms.blogspot.in/

மண்புழு உரம் தயாரிப்பு



கழிவுகள் என்பது நாம் முறையாக பயன்படுத்த தவறிய மூலப்பொருள்கள் ஆகும். பொதுவாக வேளாண் கழிவுகள், கால்நடை கழிவுகள் போன்றவற்றை ஒரே இடத்தில் குவித்து வைக்கும் பொழுது கெட்ட நாற்றம் ஏற்படுகிறது. ஆனால் அவற்றில் இருந்து அதிக அளவிலான இயற்கை எருவை உருவாக்க முடியும். இந்த மதிப்புள்ள மூலப்பொருள்களை முறையாக மட்கவைப்பதின் மூலம் நமக்கு மதிப்பூட்டப்பட்ட எரு கிடைக்கிறது. இவ்வாறு அங்ககக் கழிவுகளை மக்கவைத்து வளம் குன்றிய மண்ணை பேணிக்காப்பதே மண்புழு உரத்தின் முதன்மையான பயனாகும்.

உள்ளுர் இரக மண்புழுக்களைக் கொண்டு மண்புழு உரம் தயாரித்தல்

உலக அளவில் சுமார் 2500 மண்புழு இனங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இதில் 500 வகை இனங்கள் இந்தியாவில் உள்ளன. வெவ்வேறு மண்வகைக்கு ஏற்ப மண்புழு உரங்கள் மாறுபடும். எனவே மண்புழு உரம் தயாரிக்க அந்தந்த மண்ணிற்கு ஏற்ற மண்புழுக்களை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியம் இல்லை. இந்தியாவில் பெரியோனிக்ஸ் எக்ஸ்கவேடஸ் மற்றும் லேம்பீட்டோ மெளருட்டி என்ற இரு இனங்களை பயன்படுத்துகிறோம். மண்புழுக்களை வளர்ப்பதற்கு, குழிகளையோ, தொட்டிகளையோ அல்லது வளைவான கட்டமைப்புகளையோ பயன்படுத்தி கொள்ளலாம்.

 எவ்வாறு உள்ளூர்ரக மண்புழுக்களை தேர்வு செய்யமுடியும்?

   1. மண்ணின் மேற்பரப்பில் தென்படக்கூடிய, புழுக்களின்  ஆக்கிரமிப்புள்ள மண்ணை கண்டறிய வேண்டும்.
   2. 500 கிராம் வெல்லம் மற்றும் ஒரு கிலோ மாட்டுச்சாணம் ஆகிய இரண்டையும் 2 லிட்டர் தண்ணீரில் கரைத்து 1 மீ x 1 மீ பரப்பளவில் மண்ணின் மேல் தெளிக்க வேண்டும்.
   3. வைக்கோல் கொண்டு மூடிவிட்டு பின்பு அதன் மேல் கோணிப்பை வைத்து போர்த்த வேண்டும்.
   4. 20-30 நாட்களுக்கு தண்ணீர் தெளிக்க வேண்டும்.
   5. அந்த இடத்தில், மண்புழுக்கள் மேற்பரப்பில் அதிக அளவில் வரத்தொடங்கும். அவற்றை சேகரித்து பயன்படுத்திக் கொள்ளலாம்.
எரு-குழி தயாரித்தல்

எரு-குழி தயாரிப்பதற்கு பல முறைகள் இருந்தாலும், நாம் நம் வசதிக்கேற்ற வடிவமைப்பில், வீட்டின் பின்புறத்திலோ, தோட்டத்திலோ அமைக்கலாம். செங்கற்கள் கொண்டு ஒரு குழி, இரு குழி அல்லது வசதிக்கேற்ற அளவிளான தொட்டிகள் போன்றவற்றை முறையான நீர் வெளியேற்றக் குழாய்களுடன் அமைக்க வேண்டும். வேளாண் கழிவுகள் மற்றும் இதர பொருட்களின் கொள்ளவைக் கொண்டு தொட்டிகளின் அளவை தீர்மானம் செய்ய வேண்டும். தொட்டிகளின் சுவரின் நடுவில் சிறு குழிகளில் நீர் தேக்கம் செய்வதன் மூலம் புழுக்களை எறும்பு தாக்கத்தில் இருந்து காப்பாற்ற முடியும்.

நான்கு அறை தொட்டி / குழி முறை

நான்கு அறை தொட்டிகளின் மூலம் புழுக்கள் ஒரு அறையில் இருந்து மற்றொரு அறைக்கு எளிதாக செல்கின்றன. இதன் மூலம், புழுக்கள் ஒரு அறையில் உள்ள கழிவுகள் நன்கு மட்கியவுடன், மற்றொரு அறைக்கு சென்று கழிவுகளை மட்கச் செய்கின்றன.
http://sreekaviyafarms.blogspot.in/
மண் புழு உரம் தயாரிப்பு


மண்புழு படுக்கை தயாரித்தல்

மண்புழு படுக்கை

அடிப்பாகத்தில் சிறு கல் மற்றும் மணலின் (5 செமீ உயரம்) மேல் சுமார் 15-20 செமீ உயரத்திற்கு ஈரப்பதத்துடன் கூடிய வண்டல் மண் பரப்பப்பட்ட படுக்கை அமைக்க வேண்டும்.

வண்டல் மண்ணின் மீது மண்புழுக்களை விட்டவுடன், அவை மண்புழு படுக்கையை தன் சொந்த இருப்பிடம் போல் எண்ணுகின்றன. குழியை 2 மீ x 1 மீ x 0.75 செமீ  என்ற அளவிலும், மண்புழு படுக்கை 15 - 20 செமீ என்ற அளவிலும் அமைய வேண்டும்.

கையளவு மாட்டுச்சாணத்தை படுக்கையின் மீது தூவ வேண்டும். பின்பு 5 செமீ உயரத்திற்கு வெட்டிய வைக்கோலையோ அல்லது இயற்கை கழிவுகளையோ இட வேண்டும். அடுத்த 30 நாட்களுக்கு தேவைப்படும்போதெல்லாம் நீர் தெளித்து ஈரப்பதத்துடன் வைத்துக்கொள்ள வேண்டும்.

படுக்கை வறண்டோ அல்லது சொதசொதப்பாகவோ இருக்கக்கூடாது. பறவைகளிடம் இருந்து காக்க தென்னை அல்லது பனை ஓலைகள் அல்லது கோணிப்பைகள் கொண்டு மூடி வைக்க வேண்டும்.

வெப்பத்தை இழுக்கும் தன்மையுடையது என்பதால் பிளாஸ்டிக் பைகளை உபயோகிக்கக் கூடாது. 30 நாட்கள்  கழித்து ஈரப்பதமுடைய தாவரம் அல்லது கால்நடைக் கழிவுகளை, சமையலறை, உணவகம், வயல் போன்ற இடங்களில் இருந்து சேகரித்து அவற்றை சீர் செய்து 5 செமீ அளவிற்கு நிரப்ப வேண்டும். இவ்வாறு வாரம் இருமுறை செய்ய வேண்டும். இயற்கை கழிவுகளை மண்வெட்டி கொண்டு முறையே கலக்கிவிட வேண்டும்.

சரியான அளவு ஈரப்பதத்தை பராமரிக்க, முறையாக நீர் தெளிக்க வேண்டும். வானிலை வறட்சியாக இருந்தால் அடிக்கடி நன்றாக நீர் தெளிக்க வேண்டும்.

எப்பொழுது எரு தயாராகும்?

1.   அடர்-காப்பி நிறத்தில், பொடியாக, குருணையாக, எடைகுறைவாக, துளைகள் நிரம்பிய மெல்லிய மண் அடுக்கமைப்புடன் இருக்கும் தருணமே தொழுஉரம் தயார் நிலையில் இருக்கும் தருணம் ஆகும்.

2.  60 - 90 நாட்களில் (குழி அல்லது தொட்டியின் அளவை பொருத்து) தொழு எரு தயாராகி விடும். புழுக்களின் கூடுகளைப் பார்த்து, குழியிலிருந்து தொழு எருவை அறுவடை செய்யலாம்.

3.  புழுக்களை தொழு எருவிலிருந்து எளிதாகப் பிரித்து எடுக்க, எரு எடுக்கும் 2-3  நாட்களுக்கு முன்பிருந்து நீரிடுவதை நிறுத்த வேண்டும். இதனால் 80 சதவீத புழுக்கள் படுக்கையின் அடிப்பகுதிக்குச் சென்றுவிடும்.

4.  மேலும் புழுக்களை சல்லடை அல்லது வலைகள் கொண்டும் பிரித்து எடுக்கலாம். புழுக்களும், தடிமனான பொருட்களும் வலையின் மீது நின்று விடும். இதனை குழியில் கொட்டி திரும்பவும் பயன்படுத்தலாம்.   மட்கிய உரம் மண்வாசனை போன்ற மணம் உடையது. முழுமையாக மக்காமல் இருந்தால் அதிலிருந்து கெட்ட வாடை வரும். இது நுண்ணுயிரின் செயல்பாடு முடிவடையாமல் நடந்து கொண்டிருக்கிறது என்பதை தெளிவாக்கும். புளித்த வாடை வந்தால், அது பூஞ்சாணம் மற்றும் அதிக வெப்பத்தின் அறிகுறி ஆகும். இதனால் தழைச்சத்து இழப்பு நேரிடும். இவ்வாறு இருப்பின், நல்ல காற்றோட்டம் ஏற்படுத்தி, நாறு போன்ற பொருட்களை சேர்த்து  உலர்த்த வேண்டும். பின்பு மட்கிய எருவை சல்லடை கொண்டு சலித்து எடுக்க வேண்டும்.
http://sreekaviyafarms.blogspot.in/
மண் புழு உரம் தயாரிப்பு


5. சேகரித்த பொருட்களை சூரிய ஒளியில் குவித்து வைக்க வேண்டும். இதனால் புழுக்கள் குளிர்ச்சியான அடிப்பகுதிக்கு சென்றுவிடும்.

6.  இரு அறை அல்லது நான்கு அறை குழியில் நீரிடும் போது, முதல் அறைக்கு நீரிடுவதை நிறுத்தி விடவேண்டும். இதம் மூலம் புழுக்கள் தானாகவே ஒரு அறையிலிருந்து மற்றொரு அறைக்கு செல்கின்றன. இவ்வாறு செய்வதால் சுழற்சி முறையில் தொடர்ச்சியாக எருவை அறுவடை செய்ய முடிகிறது.

மண்புழு மட்கு உரத்தின் பயன்கள்
இயற்கை கழிவுகளை, மண்புழுக்களைக் கொண்டு மட்க வைப்பதன் மூலம், நல்ல கட்டமைப்புடன் கூடிய, நச்சுத்தன்மையற்ற நல்ல மதிப்பூட்டமுள்ள எரு கிடைக்கிறது.

பயிர் வளர்ச்சிக்கு தேவையான கணிமப்பொருள்களையும், நுண்ணூட்டங்களையும் பயிர்களுக்கு எளிதில் கிடைக்கச் செய்து நல்ல கலப்பு உரமாக செயல்படுகிறது.

தொழுஉரம், மண்ணில் உள்ள நோய் பரப்பக்கூடிய நுண்ணுயிர்களை குறைத்து விடுகிறது.

பொருளாதார ரீதியாக பின்தங்கிய நிலையில் உள்ள மக்களுக்கும், சமுகத்தின் கீழ்தட்டில் உள்ள மக்களுக்கும், மண்புழு தயாரித்தல் ஒரு சிறந்த குடிசைத் தொழிலாக அமைந்து அவர்களின் வாழ்க்கைக்கு கூடுதல் வருமானத்தை அளிக்கிறது.
                ஒவ்வொரு கிராமத்திலும், வேலையில்லாத இளைஞர்களையும் பெண்களையும் இணைத்து கூட்டுறவு சங்கங்கள்அமைத்து, மண்புழு உரம் தயார்செய்யலாம். மேலும் அவர்களே விலை நிர்ணயம் செய்து கிராம விவசாயிகளுக்கு விற்பனை செய்து ஒரு புதுமை படைக்கலாம். இதன் மூலம் இளைஞர்கள் நல்ல வருமானம் பெறுகின்றனர். அதோடுமட்டுமல்லாமல் நல்ல தரமான தொழுஉரத்தை அளித்து ஒரு நல்ல நீடித்த வேளாண்மை தொழில் செய்ய ஊக்குவிக்கிறது.


நன்றி -  ஸ்ரீ ஏ.எம்.எம். முருகப்ப செட்டியார் ஆராய்ச்சி நிலையம், சென்னை
நன்றி -http://www.indg.in

Monday, 13 May 2013

அசோலா வளர்ப்பு

http://sreekaviyafarms.blogspot.in
அசோலா வளர்ப்பு

அசோலா பெரணி வகையைச் சார்ந்த நீரில் மிதக்கும் தாவரம். பெரும்பாலும் பச்சை அல்லது இலேசான பழுப்பு நிறத்தில் காணப்படும். இதனை மூக்குத்திச் செடி அல்லது கம்மல் செடி என்றும் அழைப்பர்.

இதில் புரதச்சத்து 25-35%, தாதுக்கள் 10-12% மற்றும் 7-10% அமினோ அமிலம் கார்போஹைட்ரேட் எண்ணெய் சத்துக்கள்.

தேவையான பொருட்கள்:
(6’X3’, தினம் 500கி-1 கிலோ உற்பத்தி செய்ய போதுமானது)
1.    செங்கல்                       -           30-40 கற்கள்
2.    சில்பாலின் பாய்          -           2.5 மீ நீளம், 1.5மீ அகலம் (அ) 6’X3’
3.    செம்மண்                     -           30 கிலோ
4.    புதிய சாணம்              -           30 கிலோ
5.    சூப்பர் பாஸ்பேட்        -           30 கிராம் (அ)
அசோஃபெர்ட்             -           20 கிராம்
6.    தண்ணீர்                      -           10 செ.மீ. உயரம் (சராசரியாக 6-9 குடம்)
7.    அசோலா விதை          -           300-500 கிராம்
8.    யூரியா சாக்கு              -           தேவையான எண்ணிக்கை (6’X3’ ச.அடியை நிரப்ப)

http://sreekaviyafarms.blogspot.in
அசோலா வளர்ப்பு


அசோலா வளர்ப்பு முறை:

இடத்தைத் தயார் செய்தல்:
1.    மர நிழலில் (நேரடி சூரிய ஒளி ஒரு நாளைக்கு 3 மணி நேரத்திற்கு மேல் இருக்கக்கூடாது) இருக்குமாறு தேர்வு செய்ய வேண்டும்.
2.    இடத்தின் அளவு 6’X3’ இருக்க வேண்டும்.
3.    புல் பூண்டுகளை அகற்றி இடத்தை சுத்தம் செய்ய வேண்டும்.
4.    இடம் குண்டும் குழியுமாக இல்லாமல் சம தளமாக்க வேண்டும்.
5.    புல் பூண்டுகள் வளருவதை தடுக்க யூரியா சாக்கினை  பரப்பவும்.

செய்முறை:
1.    செங்கலை குறுக்கு வாட்டில் தயார் செய்யப்பட்ட இடத்தை சுற்றிலும் வைக்க வேண்டும்.
2.    அதன் மேல் சில்பாலின் பாயை பரப்பி விட வேண்டும்.
3.    சில்பாலின் பாயின் மீது 10-15 கிலோ செம்மண்ணை சம அளவில் பரப்பி விட வேண்டும்.
4.    தண்ணீரின் அளவு 10 செ.மீ உயரம் வரும் வரை சுமார் 6-9 குடம் ஊற்ற வேண்டும். ஊற்றுவது குடிநீராக இருக்க வேண்டும்.
5.    புதிய சாணம் 2 கிலோ மற்றும் 20 கி அசோஃபெர்ட் (அ) 30 கி சூப்பர் பாஸ்பேட் 10 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.
6.    500-1000 கிராம் சுத்தமான அசோலா விதைகளை போட்டு அதன் மேல் லேசாக தண்ணீர் தெளிக்கவும்.


http://sreekaviyafarms.blogspot.in/
அசோலா வளர்ப்பு


வளர்ச்சி:
1.    விதைத்த 3 நாட்களில் எடை மூன்று மடங்காக பெருகும்.
2.    பசுந்தீவனம் 15 நாட்களில் நல்ல வளர்ச்சி அடைந்து அறுவடைக்கு தயாராக இருக்கும்.
3.    15 நாட்கள் கழித்து நாள் ஒன்றுக்கு 500 கிராமிலிருந்து 1 கிலோ வரை அறுவடை செய்யலாம்.

பராமரிப்பு:
1.    தினந்தோறும் குழியிலுள்ள அசோலாவினை கலக்கி விட வேண்டும்.
2.    தண்ணீன் அளவு 10 செ.மீ. க்குக் குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
3.    5 நாட்களுக்கு ஒரு முறை 2 கிலோ புதிய சாணம் மற்றும் 20கிராம்  அசோஃபெர்ட்  (அ) 10 கிராம் ( ஒரு தீப்பெட்டி அளவு) சூப்பர் பாஸ்பேட் தண்ணீரில் கலந்து ஊற்ற வேண்டும்.
4.    10 நாட்களுக்கு ஒரு முறை மூன்றில் ஒரு பங்கு தண்ணீரை வெளியேற்ற வேண்டும். பதிலாக சுத்தமான தண்ணீரை ஊற்ற வேண்டும்.
5.    மாதம் ஒரு முறை மூன்றில் ஒரு பங்கு மண்ணை வெளியேற்ற வேண்டும். பிறகு சுத்தமான சலித்த செம்மண்ணை இட வேண்டும்.
6.    6 மாதத்திற்கு ஒரு முறை அசோலா விதைகளை தவிர அனைத்து இடுபொருட்களையும் வெளியேற்றி புதியதாக இட வேண்டும்.

தீவனம் அளிக்கும் முறை:
1.    தினமும் 500கிராம்- 1 கிலோ அசோலாவை எடுத்து நீரில் அலசிக்கொள்ள வேண்டும்.
2.    பச்சையாகவோ அல்லது பதப்படுத்தியோ அல்லது அடர் தீவனத்துடன் கலந்தும் கொடுக்கலாம்.
3.    உணவு உப்புடன் சேர்த்தும் அளிக்கலாம்.
4.    வைக்கோலுடன் சேர்த்தும் அளிக்கலாம்.



பயன்கள்:
1.    1 கிலோ அசோலா 1 கிலோ புண்ணாக்கிற்கு சமம்.
2.    அசோலாவை உட்கொள்வதால் பால் உற்பத்தி 15-20% அதிகரிக்கும்.
3.    பாலில் கொழுப்பு மற்றும் கொழுப்பு அல்லாத சத்துக்கள் அதிகரிக்கிறது.
4.    கோழிக்கும், வாத்திற்கும் தீவனமாக பயன்படுத்தலாம். அதிக எடை கிடைக்கும்.
5.    உணவு உப்புடன் சேர்த்து பன்றிகளுக்கு அளித்தால் பன்றியின் எடை கூடுவதுடன் இறைச்சி தன்மையும் நன்றாக இருக்கும்.
6.    முயல்கள் அசோலாவை விரும்பி உண்ணும்.
7.    அசோலா வளர்க்கும் இடத்தில் கொசுத் தொல்லை இருக்காது.

வளர்ச்சியை பாதிக்கும் காரணிகள்

1.    தண்ணீர்:
அசோலாவனது தண்ணீர் ஊற்றி வறண்டுவிட்டால் உடனே இறந்து விடுகிறது.

2.    ஈரப்பதம்:
காற்றின் ஈரப்பதம் 85-90% இருக்கும்போது அசோலா நன்கு வளர்கிறது. ஈரப்பதம் 60%ற்கு குறையும்போது வறண்டு இறந்துவிடுகின்றது.

3.    சூரிய ஒளி:
கோடைக் காலங்களில் பகல் நேரங்களிலுள்ள அதிக சூரிய ஒளி அசோலாவை பழுப்பு நிறமாக மாற்றிவிடுகின்றது.

4.    காற்று:
வேகமாக வீசும் காற்றானது பாத்திகளிலுள்ள அசோலாவை ஒரு பக்கமாகக் கொண்டு சேர்த்துவிடும். இதனால் அசோலாவின் வளர்ச்சி பெரிதும் பாதிக்கப்படுகிறது.

5.    மண்ணின் கார அமிலத் தன்மை:
காரத் தன்மையுள்ள மண்ணில் அசோலாவின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. நுண்ணூட்டச் சத்துக்களுக்கு ஏற்ப அசோலாவின் வளர்ச்சி மாறுபடுகின்றது.


நன்றி -smarttnvas.blogspot.in

Sree Kaviya Farms: 'நிலத்து நீரை உலர விடாத உயிர்வேலி!

Sree Kaviya Farms: 'நிலத்து நீரை உலர விடாத உயிர்வேலி!: ''நிலத்து நீரை உலர விடாத உயிர்வேலி!'' '‘எங்களுக்கு 18 ஏக்கரில் தென்னந்தோப்பு உள்ளது. எல்லாம் 25 வயது-டைய மரங்கள். அதனுள...

'நிலத்து நீரை உலர விடாத உயிர்வேலி!

''நிலத்து நீரை உலர விடாத உயிர்வேலி!''

'‘எங்களுக்கு 18 ஏக்கரில் தென்னந்தோப்பு உள்ளது. எல்லாம் 25 வயது-டைய மரங்கள். அதனுள் ஊடு-பயிராக வேறு சில மரங்களை நட விரும்புகிறோம். தகுந்த வல்லுநரிடமிருந்து அதற்-கான நேரடி ஆலோச-னைகள் கிடைக்-குமா?’’ என கடிதம் அனுப்பி இருந்தனர் திருப்பூர் மாவட்டம் திருமூர்த்திமலையை அடுத்துள்ள தளிஜல்லிப்பட்டியைச் சேர்ந்த தம்பதியினர்.
இவர்களுக்கு ஆலோசனை சொல்வதற்காக பொள்ளாச்சி, மலையாண்டிப்பட்டணத்-தைச் சேர்ந்த 'இயற்கை வழி வேளாண்மை' நிபுணர் மது. ராமகிருஷ்ணனை அழைத்துச் சென்றோம்.
‘‘ஊடுபயிரா வாழை வைக்கக்கூடாதுனு சொல்றது தப்பு. வாழைக்கு எடுக்க மட்டுமில்ல, கொடுக்கவும் தெரியும். அதனால தாராளமா வாழையை வைக்கலாம். அதோட சூபாபுல், சவுண்டல், செடிமுருங்கை, பாக்கு, கோகோனு எதை வேணும்னாலும் ஊடுபயிரா நடலாம்'' என்று சொன்ன வல்லுநர், ''காத்தை அறுவடை செய்றதுதான் இயற்கை வேளாண்மையில தெரிஞ்சுக்க வேண்டிய முக்கியமான யுக்தி’’ என்றதும், 
உலராமல் இருக்க உயிர்வேலி அவசியம்!
'‘காத்து, அது போற இடத்துல இருக்கற ஈரத்தை எல்லாம் உறிஞ்சுகிட்டு, நிலத்தை உலரவைச்சிட்டுப் போயிடும். காத்து, ஈரத்தை எடுத்துட்டுப் போகாம தடுக்குறதுதான் உயிர் வேலி வேளாண்மை. சவுண்டல், அகத்தி, கிளரிசிடியா, நொச்சி மாதிரியான பயிருங்களை வேலிப்பயிரா நட்டு, உயிர்வேலி அமைச்சுக்கணும். வேலியோரமா வளந்து நிக்குற மரங்க, காத்தோட வேகத்தை தடுத்து, நிலத்துல இருக்கற ஈரப்பதத்-தைத் தக்க வைச்சுக்கும். உயிர்வேலியை மழைக்-காலத்துல நட்டுட்டா, நல்லா வேர் பிடிச்சுக்கும். பிறகு எந்த வறட்சியிலும் காஞ்சு போகாது.


நன்றி பசுமை விகடன், 10-செப்டம்பர், 2009.
www.sreekaviyafarms.blogspot.com
உயிர் வேலி

Monday, 15 April 2013

நாட்டுகோழி குழம்பு



நாட்டுக்கோழிக் குழம்பு

தேவையான பொருட்கள்

நாட்டுக்கோழி- 1 கிலோ
சிறிய வெங்காயம் - 1/2 கிலோ
தக்காளி - 2
தேங்காய்  1/2 மூடி
கறிவேப்பிலை - 5 கொத்து
கொத்தமல்லி - சிறிது
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
மிளகாய் தூள் - 3 தேக்கரண்டி
மல்லி தூள் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
கரம் மசாலா தூள் - ஒரு தேக்கரண்டி
சோம்பு - ஒரு தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 2
எண்ணெய் - தேவையான அளவு
இஞ்சி, பூண்டு தேவைக்கு ஏற்ப
பட்டை, கிராம்பு, சோம்பு தேவைக்கு ஏற்ப

பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்த உடன் இஞ்சி, பூண்டு, பட்டை, கிராம்பு, சோம்பு போட்டு தாளிக்க வேண்டும். பின் அதில் வெங்காயம், வரமிளகாய், கறிவேப்பிலை, தக்காளி போட்டு வதக்கவும்.

தக்காளியை நன்கு வதக்க வேண்டும்.

அதில் தேங்காய், மல்லித்தூள், மிளாகய்தூள், மஞ்சள் போட்டு இறக்கி ஆற வைத்து நன்கு அரைக்கவும்
அடுப்பில் எண்ணெய் காய்ந்ததும் வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
 பின்னர் இதில் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.
 அதன்பின் மஞ்சள், தூள், கரம் மசாலா தூள், கோழி சேர்த்து நன்கு வதக்க வேண்டும். கோழித்துண்டுகள் கொஞ்சம் வேகும் வரை வதக்க வேண்டும.

அரைத்த மசாலா மற்றும் உப்பு போட்டு தேவையான தண்ணீர் ஊற்றி கறி நன்கு வேக விடவும்.
கொத்தமல்லி தூவி இறக்கவும்.. இப்ப ஆவி பறக்கும் நாட்டுக்கோழிச்சாறு தயார்.