Wednesday 19 June 2013

சொட்டு நீர் பாசனம்



சொட்டு நீர் பாசனம்
அ. செயல்கள்:

பயிர்களுக்கு நீரை அழுத்தத்துடன் வலைப்பின்னல் குழாய் வழியாக வழங்குகின்ற முறையாகும்.

ஆ. உபகரணங்கள்:

முக்கிய பகுதியில் மேல் நிலைத் தொட்டி இருக்கும்.

முக்கிய குழாய் பகுதியில் 50 மி.மீ, 75 மி.மீ, எச். டி. பி. இ அல்லது பி.வி.சி குழாய்கள் பயன்படுத்தப்படுகின்றன.

துணை குழாய் பகுதியில் 45 மி.மீ, 50 மி.மீ எச்.டி.பி.இ. குழாய்கள் பயன்படுத்தப் படுகின்றன.

பக்கவாட்டில், 12 மி.மீ, 16 மி.மீ, எல்.எல்.டி.பி.இ பயன்படுத்தப்படுகின்றன.

சொட்டு குழாய்கள்
 – 2 எல்.பி.எச், 4 எல்.பி.எச், 8 எல்.பி.எச் அழுத்தமுடைய வகைகள் மிகவும் ஏற்றது.

வடிக்கும் பகுதி: பெரிய மண் துகள்களை வடிக்க மணல் வடிப்பான் பயன்படுத்தப்படுகிறது. சல்லடை வடிப்பான் (120 மைக்ரான் அளவு) நுண்ணிய துகள்களை வடிக்க பயன்படுகிறது.

உர பகுதி: கரைத்த உரங்கள் அல்லது நீர்ம உரங்களை அளிப்பதற்கு உரத் தொட்டி பயன்படுகிறது. அழுத்தமானி 0.5 முதல் 2.5 கே.எஸ்.சி மற்றும் குழாயின் அளவைப் பொறுத்து கதவுத் தடுப்பு பயன்படுகிறது. இதனால் நீரின் ஓட்டத்தைக் கட்டுப்படுத்தவும், கலனிக்காகவும் முடிகிறது. 
இ.கவனிக்க வேண்டியவை
1.சாதாரண முறையைக் காட்டிலும் 50-65 சதம் வரை நீர் சேமிக்கப்படுகிறது
2. பயிர் எளிதில் வளர்ச்சி அடைகிறது
3. அதிக உற்பத்தி மற்றும் உயர்ந்த தரம்
4. நிலத்தை ஒரளவு சமப்படுத்தினாலலே போதுமானது நடை முறை நீர்ப்பாசனம் போன்று சரிசமமாகச் செய்ய வேண்டிய அவசியமில்லை
5. சாதாரண, தண்ணீரையே பயன்படுத்தலாம். நல்ல தண்ணீரை மட்டுமே உபயோகிக்க வேண்டிய அவசியம் இல்லை

ஈ.விலை


நீர்த் தேவை (லி எக்டர்), உற்பத்தி அதிகரிப்பு, நீர் சேமிப்பு (சதவீதம்) பக்க இடைவெளி மற்றும் செலவீனங்களை ஆகியவை கீழ்க்கண்ட அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளன.

அட்டவணை : 1
பயிர்கள்நீர்த் தேவை (லிட்)சதவீதம்பக்கக்குழாய் (மீ)செலவு ரூ/எக்டர்
சொட்டுநீர்பழைய முறைஉற்பத்தி அதிகரிப்புநீர் சேமிப்பு
தென்னை75-100200-30030457.5030,000
கொய்யா25-4590-10023483.050,000
மா30-5090-150234010.028,000
சப்போட்டா20-3070-100405010.028,000
மாதுளை20-4060-13048455.034,000
வாழை8-1230-4052452.056,000
எலுமிச்சை10-2025-6540603.050,000
பப்பாளி5-818-2675682.056,000
கத்திரி1-24-814531.2075,000
வெண்டை1-24-616401.2075,000
தக்காளி1-24-680391.2075,000
மிளகாய்1-23-644621.2075,000
பூசணி வகைகள்1-23-615541.2075,000


நன்றி: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்

0 comments:

Post a Comment